Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....

Nandhinipriya Ganeshan September 30, 2022 & 12:00 [IST]
குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....Representative Image.

Home Remedies for Dry Chapped Lips: குளிர்காலத்தில் பொழியும் பனியின் காரணமாக நம் உதடுகள் வறண்டு போவதுபோல் தோன்றும். அதுமட்டுமல்லாமல், உதடுகள் வெடித்து அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே, உதடுகள் மெல்லியதாகவும், மிக மிருதுவாகவும் இருப்பதால் அவற்றை நாம் கூடுதலாக கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். முகத்தில் உள்ள மற்ற தோலுடன் ஒப்பிடும் போது உதடுகள் வெகு விரைவாகவே வறண்டு போவதால், உதடுகள் போதுமான ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதும் அவசியம். 

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையான சருமத்தை பெற இந்த ஈஸியான டிப்ஸ பின்பற்றுங்க.. 

வெப்பநிலை குறையும் போது, நாம் தண்ணீர் குடிப்பதை குறைத்துவிடுகிறோம். அதனால் உடலின் ஈரப்பதம் குறைகிறது. பொதுவாக, உதடுகள் உடலின் நீரேற்ற அளவைக் காட்டுகின்றன. அப்போது, உதடுகள் வறண்டு, வெடிப்பு மற்றும் சேதமடைந்ததாகத் தோன்றினால், அது உடலுக்கு அதிகம் தண்ணீர் தேவை என்பதைக் குறிக்கிறது. கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீரை அதிகமாக குடியுங்கள். சூப் அல்லது டீ கூட குடிக்கலாம், இது குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க உதவும்.

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....Representative Image

உதடுகள் வெடிப்பதைத் தடுக்க சில குறிப்புகள்:

உதடுகளை நக்கவோ கடிக்கவோ வேண்டாம்:

உதடுகள் உலர்ந்த நிலையில் இருக்கும்போது அவற்றை நக்கவோ அல்லது கடிக்கவோ கூடாது. ஏனெனில் உதடுகளை நக்கும்போது உமிழ்நீர் அதில் பட்டு அதை மேலும் வறட்சியடைய செய்கிறது. எனவே, நீங்க எப்போதெல்லாம் உங்க உதடுகளை வறண்டதாக உணருகிறீர்களோ அப்போதெல்லாம், அவற்றை ஹைட்ரேட் செய்ய லிப் பாம்களை தடவுங்கள். அதோடு தேவையில்லாமல் அடிக்கடி உதடுகளை தொடாதீர்கள். கைகளில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உதடுகளில் பட்டு அதை மோசமாக்கும்.

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....Representative Image

லிப் பாம் பயன்படுத்துங்கள்

மெந்தால், யூகலிப்டஸ் மற்றும் கற்பூரம் பயன்படுத்திய லிப் பாம்களை பயன்படுத்துவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உதடுகளை மேலும் வறட்சியாக்கி, பிரச்சனையை மோசமாக்கும். அத்தியாவசிய எண்ணெய்கள், கிளிசரின் மற்றும் பெட்ரோலியம் ஆகியவற்றை கொண்ட லிப் பாம்களை பயன்படுத்துங்கள். இது ஈரப்பதை அளிப்பதோடு, விரிசல்களை குணப்படுத்த (how to prevent dry lips)  உதவுகிறது. மேலும், வாயில் சுவாசிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது உதடுகளை விரைவாக உலர்த்துகிறது. உதடுகள் வறண்டு போகும் போதெல்லாம் லிப் பாம் தடவும். லிப் பாம் மீது லிப்ஸ்டிக் கோட் போடுவது உதடுகளை அழுக்கு, வறண்ட காற்று மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது. தினமும் இரவில் தூங்கும்போது லிப் பாம் போட்டு படுத்துக்கொள்ளுங்கள் வறட்சி மற்றும் வெடிப்பை (home remedies for dry lips) குறைக்கும்.

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....Representative Image

பெட்ரோலியம் ஜெல்லி

உதடுகளில் விரிசல், பிளவுகள் மற்றும் தோல் உதிர்தல் ஆகியவை குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான சரும பிரச்சனைகள். உதடுகள் வெடிக்கும்போது அல்லது உரிக்கப்படும்போது அவற்றை ஸ்க்ரப் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மேலும், குளிர்க்காலத்தில் உதடுகள் அடிக்கடி வறண்டு போவதை தடுக்க பெட்ரோலியம் ஜெல்லியை (how to cure dry lips at home) பயன்படுத்துங்கள். 

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....Representative Image

நிறைய தண்ணீர் குடிங்க

குளிர்ந்த காலநிலையில் உதடு பராமரிப்புக்கு உதடு பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம் தான். இருப்பினும், உதடுகளை நீரேற்றமாக வைத்துக்கொள்ள ஏராளமான தண்ணீரை குடிப்பதும் அதே அளவிற்கு அவசியமானது. றண்ட மற்றும் வெடிப்பு உதடுகளுக்கு நீரிழப்பு முக்கிய காரணம். எனவே, வறட்சியை எதிர்த்துப் போராட, உங்கள் உதடுகளை ஆரோக்கியமாகவும் ஈரமாகவும் வைத்திருக்கவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். குளிர்காலத்தில் கூட, தினமும் 6-7 கிளாஸ் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்