எந்த உறவில் தான் சண்டை இல்லாமல் இருக்கிறது. ஆனால், அதற்காக எப்போதும் சண்டையே போட்டுக்கொண்டிருந்தால் எதிர்காலம் தான் என்னாவது. எல்லாவற்றிற்கும் தீர்வு என்பது ஒன்று இருக்கிறது அல்லவா? சில கணவன்-மனைவி அல்லது காதலன்-காதலியை பார்த்தால் அவர்கள் மட்டும் எப்படி சண்டையே போடாமல் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் உங்களாலும் அப்படி சந்தோஷமாக இருக்க முடியும். வாழ்க்கையில் துணையுடன் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு இந்த வழிகளை பின்பற்றி பாருங்க.
கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...
இருவருக்குள் ஒரு பிரச்சனை என்றால் அமர்ந்து பேசி அதில் இருக்கும் தவறுகளை ஆராய்ந்து யாரின் மீது என்னென்ன தவறுகள் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அந்த பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று சிந்தியுங்கள். அதைவிடுத்து ஒருவரின் மீது ஒருவர் பழிபோட்டுக் கொண்டே இருந்தால் எந்த தீர்வும் கிடைக்காது. இதில் வெளிப்படையான பேச்சு மிகவும் முக்கியமான ஒன்று.
இன்னொரு முக்கியமான விஷயம். நீங்களோ அல்லது உங்கள் காதலரோ கணவரோ எப்பவோ பண்ண தவறுகளை அப்போதே தீர்த்துக் கொள்ளாமல் அதை மனதில் வைத்து கொண்டு அலைய வேண்டாம். இதுதான் மிகப்பெரிய பிரச்சனை ஆரம்பப்புள்ளி. ஏன், இருவரின் பிரிவுக்கும் காரணமாகிவிடும். எனவே, முடிந்த எந்தவொரு விஷயத்தில் இருந்து கற்க வேண்டியதை கற்றுக்கொண்டு அப்போது மறைந்துவிட்டு, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுங்கள்.
உறவில் இருக்கும் இருவருமே மெச்சூராக இருக்க முடியாது. ஒருவர் வெகுளியாக தான் இருப்பார்கள். எனவே, மெச்சூரானவர் எந்தவொரு பிரச்சனையையும் மற்றொருவருக்கு சொல்லி புரிய வைக்க முயற்சி செய்யலாம். ஏன், கொஞ்சம் காலம் பொறுத்துக்கூட பார்க்கலாம். ஆனால், என்ன செய்தாலும் வேலைக்கு ஆகவில்லை என்றால் அதிலிருந்து வெளியேறலாம். இருப்பினும், கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள் சொல்லும்விதத்தில் சொன்னால்.
சண்டையின் போது உங்களுக்காகவும், உங்களை பற்றிய நியாயம் என்ன என்பதை மட்டும் பேசினால் போதுமானது. அதைவிடுத்து, உங்கள் துணையை குறைக்கூறுவது, அவர்கள் செய்த தவறுகளை லிஸ்ட் போடுவது என்று பேசினால் இறுதியில் தவறான பாதையில் தான் முடியும். ஆக, உங்களை நல்லவர் என்று காட்டிக்கொள்வதற்காக உங்க துணை மீது பழிப்போடக்கூடாது.
எந்த ஒரு உறவிலும் சரி அவர்களை அவர்களாக வாழவிட வேண்டும். இது தான் மிகவும் முக்கியமானது. உங்களுக்கு இருப்பது போன்ற ஆசை, சுதந்திரம், விருப்பு, வெறுப்பு என அவர்களுக்கும் இருக்கும். எனவே, அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். ஒருத்தருக்காக, இன்னொருத்தர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய தடை போட வேண்டாம். ஒருவேளை அவர்களின் சுதந்திரத்தினால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மாற வேண்டியது நீங்களே.
உங்களுக்கு இருக்கும் பயத்தால் உங்கள் துணையின் மீது பாரத்தை போடுவதோ அல்லது பொறுப்பேற்றுக்கொள்ள சொல்வதோ கூடாது. உங்களால் தனியாக சமாளிக்க முடியவில்லை என்றால் உங்க துணையின் உதவியை கேட்கலாம். நிச்சயம் செய்வார்கள். உங்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறார்கள். பிரச்சனையை பகிர்ந்துக் கொண்டாலே வாழ்க்கை மகிழ்ச்சியாகிவிடும்.
'உன்னோட நல்லதுக்காக தான் சொல்கிறேன்' இந்த வார்த்தையை மட்டும் தெரியாமல் கூட சொல்லிவிடாதீர்கள். உறவுக்கு ஆப்பு வைக்க உதவும் வார்த்தையே இது தான். அப்படி சொல்லி சொல்லியே அவர்களை அதை பண்ணாதே, இதை பண்ணாதே என்று கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும். எனவே, அப்படி ஒரு எண்ணம் மனதில் தோன்றினால் அதை அப்பொழுதே அழித்துவிட்டு, துணையின் மீது அன்பை காட்ட முயற்சி செய்யுங்கள். தானாக அவர்களே உணர்ந்துக் கொள்வார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…