கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்பு வயிற்றைச் சுற்றி தழும்புகள் ஏற்படுவது பொதுவான ஒன்று தான். இதை 'ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்' (Stretch Marks) என்று சொல்வார்கள். கர்ப்பக்காலத்தின் வயிறு பகுதியானது பலூன் மாதிரி மெல்ல மெல்ல விரிவடைந்து கொண்டே போகும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப வயிறு விரிய ஆரம்பிக்கும். அதனால் சருமப் பகுதியும் விரிவடைந்து பிரசவத்துக்கு பிறகு சுருங்குவதால் தழும்புகள் ஏற்படுகிறது.
பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் இருந்து ஏற்பட ஆரம்பிக்கிறது. சில பெண்களுக்கு மூன்றாவது மூன்று மாதத்தின் கடைசி சில வாரங்களில் ஏற்படும். கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெச் மார்க்குகள் தோன்றுவதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஏனென்றால், உடலில் சாதாரணமாக ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளுக்கும் கர்ப்பத்தினால் ஏற்படும் ஸ்ட்ரெட் மார்க்குகளுக்கும் வித்தியாசம் உண்டு.
ஸ்ட்ரெட்ச் மார்க்கை நிரந்தரமாக எளிதில் நீக்குவது எப்படி?
இருப்பினும் பிரசவத்திற்கு பின்பு தழும்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும். அதற்கு கர்ப்பமான முதல் மாதத்திலிருந்தே இதற்கான அக்கறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, கர்ப்ப காலத்தில் கண்ட கண்ட எண்ணெய்கள், மற்றவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், நல்ல தரமான மாய்ஸ்ச்ச பயன்படுத்த வேண்டும். அதையும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிப்பது நல்லது.
இது தழும்புகள் பெரிதாக தெரிவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதியிலுள்ள சருமம் வறண்டுபோகாமலும் பார்த்துக்கொள்ளும். ஒருவேளை நீங்கள் எண்ணெய் பயன்படுத்தினீர்கள் என்றால், அந்த இடத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, எண்ணெய் உபயோகிப்பதை தவர்ப்பது நல்லது.
அதேபோல், கர்ப்பிணிகளுக்கு மார்பகத்தில் ஏற்படும் தலும்புகளை சரியான பொருந்தக்கூடிய ப்ரா உபயோகிப்பதன் மூலம் தடுக்கலாம். முடிந்த அளவுக்கு அதிகம் தண்ணீர் மற்றும் நீர் சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வதும் முக்கியமானது.
Also Read:
வீட்டிலையே உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க உதவும் ஸ்க்ரப்கள் தயாரிப்பது எப்படி?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…