Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,399.78
-845.12sensex(-1.14%)
நிஃப்டி22,272.50
-246.90sensex(-1.10%)
USD
81.57
Exclusive

How to Cure Cracked Heels at Home: இத பண்ணுங்க பாத வெடிப்பு காணாமல் போய்டும்..

Gowthami Subramani September 01, 2022 & 13:20 [IST]
How to Cure Cracked Heels at Home: இத பண்ணுங்க பாத வெடிப்பு காணாமல் போய்டும்..Representative Image.

How to Cure Cracked Heels at Home: குதிகால் பிளவுகள் என்பது பாதத்தில் வெடிப்புகள் போல ஏற்படுவதாகும். இது காலில் வலியை ஏற்படுத்தும். ஒரு சில நேரத்தில் பாத வெடிப்பினால், காலில் ரத்தம் வரலாம். பெரும்பாலும், ஆண்களை விட பெண்களுக்குத் தான், குதிகால் வெடிப்புகள் அதிகமாக உருவாகும். அது மட்டுமல்லாமல், பெரியவர்கள், குழந்தைகள் என இருவருக்கும் குதிகால் விரிசல் ஏற்படும். காலில் விரிசல்கள் அதிகமாக இருப்பின், நிற்கும் போதும், வெறுங்காலுடன் நடக்கும் போதும் சௌகரியமாக இருக்காது. இது போன்ற வெடிப்புகளைக் குணப்படுத்துவதற்குக் கீழே கொடுக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றவும். இதனால், வெடிப்புகளை ஆற்றவும், பாதத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும்.

குதிகால் வெடிப்பதற்கான காரணங்கள்

சருமம் வறண்டு காணப்படுவதினாலும், சருமத்தில் ஈரப்பதம் இல்லாததினாலும் குதிகாலில் விரிசல் ஏற்படுகிறது. இது விறைப்பாகி, விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. குதிகாலில் ஈரப்பதம் இல்லாத போது, அது வேகமாக உலர்ந்து விடும். இந்த குதிகால் பிளவில் நாம் பார்க்கும் முதல் அறிகுறி கால்சஸ் என அழைக்கப்படும் வறண்ட, தடிமனான தோல், நடைபயிற்சியின் போது குதிகால் கீழ் கொழுப்பு இருக்கும் பகுதி விரிவடைந்து காணப்படும். இதன் காரணமாக ஏற்படும் கால்சஸ் விரிசலைத் தான் குதிகால் பிளவு என்று கூறுவோம். குதிகால் தோலில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாத காரணத்தினால், நாம் சரியான கவனிப்பு எடுக்க வேண்டும். இல்லையெனில், தோல் வறண்டு விடும். மேலும், இது விரிசல்களைத் தூண்டும்.

குதிகால் விரிசல் ஏற்படுவதற்கான பொதுவான காரணிகள்

 • சில சமயங்களில் நிகழும் குறைந்த ஈரப்பதம் அல்லது குளிர் வெப்பநிலை போன்ற வானிலை காரணிகள்
 • வெறுங்காலுடன் நடப்பது மற்றும் மிகக் கடினமான தரையில் நீண்ட நேரம் நிற்பது போன்ற காரணிகளால் குதிகால் விரிசல் ஏற்படும்
 • சூடான மற்றும் நீண்ட நேர ஷவர்ஸ்-ஐ எடுத்துக் கொள்வது
 • கால்கள் வெளியில் தெரியுமாறு இருக்கும் ஷூஸ்-களை அணிவது
 • சருமத்தில், இயற்கை எண்ணெய்களைக் குறைக்கக்கூடிய, சருமத்தை வறண்ட அளவிற்கு மாற்றக்கூடிய சோப்புகளைப் பயன்படுத்துவது
 • கால்களுக்குச் சரியாகப் பொருந்தாத காலணிகளை அணிவது
 • வைட்டமின் குறைபாடு, அடோபிக் டெர்மடிடிஸ், பூஞ்சை தொற்று, கர்ப்பம், உடல் பருமன், ஹைப்போ தைரைடிசம், நீரிழவு நோய், போன்றவற்றால் ஏற்படக்கூடிய மருத்துவ நிலைகள், விளையாட்டு வீரர்களின் கால் போன்றவற்றாலும் குதிகால் பிளவு ஏற்படும்.
 • தோலில் ஏற்படும் அழற்சியின் காரணமாக அரிச்சல், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் வயதாகுதல் போன்ற காரணங்களினால் குதிகால் விரிப்புகள் ஏற்படும்.

அரிசி மாவு மற்றும் ஆலிவ் ஆயில்

அரிசி மாவு தோலின் சருமத்தை உரிக்கவும், சுத்தப்படுத்தவும், மென்மையாகவும் (best cure for cracked heels) வைக்க உதவுகிறது. மேலும், இது வெடிப்புடன் காணப்படும் குதிகால்களை ஆற்றவும் பயன்படுகிறது. மேலும், ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன் மிருதுவாக வைத்திருக்கவும் உதவும்.

 • 2 அல்லது 3 டீஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு மற்றும் 3-4 துளிகள் அளவிற்கு ஆப்பிள் சைடர் வினிகர், பிறகு ஒரு டீஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெய் போன்றவற்றைக் கலந்து பேஸ்ட் ஆக தயாரிக்கவும்.
 • மேலும், சிறிது வெது வெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அதில் 15-20 நிமிடங்கள் வரை உங்கள் கால்களை நனைக்க வேண்டும்.
 • இவ்வாறு செய்த பிறகு, காலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுவதற்கு அரிசிமாவு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த பேஸ்டை தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
 • பிறகு சாதாரண நீரில் காலைக் கழுவி ஒரு துண்டை எடுத்து உலர வைக்கவும்.
 • இது போல, இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு சிறந்த முடிவைக் காணலாம்.

அவகேடோ மற்றும் வாழைப்பழம்

அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ, ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. இது காயத்தைக் குணப்படுத்தும். மேலும், பிற முக்கிய ஊட்டச்சத்துக்களையும் இது கொண்டுள்ளன. வாழைப்பழம் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இந்த இரண்டு பொருள்களின் கலவையை வறண்ட சருமத்தின் மேல் வைத்தால் சருமம் மென்மையாகும்.

 • ஒரு பழுத்த வாழைப்பழம் மற்றும் பாதி அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்ளவும்.
 • இந்த இரண்டையும் கலந்து ஒரு மென்மையான பேஸ்ட்டைத் தயாரிக்கவும்.
 • இந்த க்ரீம் பேஸ்ட்டை காலின் விரிசல் உண்டான பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.
 • பிறகு, இதனை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 • இப்போது சருமத்தில் குதிகால் வெடிப்பு குணமாவதைக் காணலாம். தீவிரமாக இருக்கும் விரிசல்களைத் தடுக்க, இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

வேப்பிலை

இந்தியன் இளஞ்சிவப்பு என்று அழைக்கப்படும் வேப்ப இலை பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இதனால், காயத்தை விரைவாகக் குணப்படுத்தவும் முடியும். மேலும், மஞ்சள்தூள் கிருமிநாசினியாக செயல்படுவதுடன், இதனைக் குணப்படுத்தவும் ஊக்குவிக்கிறது. வெடிப்புள்ள குதிகால்களுக்குச் சிகிச்சையளிக்க இது எளிதான முறை மட்டும் அல்ல. சிறந்த வீட்டு வைத்திய முறையாகும்.

 • சில வேப்ப இலைகளை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
 • இதனுடன், ஒரு தேக்கரண்டி அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
 • பிறகு, வெதுவெதுப்பான நீரில் குதிகாலைக் கழுவவும். பின், இந்தப் பகுதியை உலர வைக்கவும்.
 • விரைவில் இந்த வெடிப்புகள் நீங்க, இந்த முறையைத் தினமும் பயன்படுத்தவும்.

ரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின்

கிளிசரின் பொதுவாக ஒரு பயனுள்ள ஈரப்பதமூட்டியாகச் செயல்படும். இதன் மூலம், உங்கள் சருமத்தில் இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ரோஸ்வாட்டரில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் காரணமாக செல் சேதத்தைத் தடுக்கலாம். மேலும், இதன் மூலம் வறண்ட மற்றும் எரிச்சல் உண்டாவதைத் தவிர்க்கும்.

 • ஒரு பேசினில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் 1 டீஸ்பூன் அளவிற்கு கிளிசரின், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் பச்சை உப்பு சேர்க்கவும்.
 • பிறகு, அதில் உங்கள் கால்களை சுமார் 10-15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
 • பியூமிஸ் ஸ்டோன் கொண்டு பாதங்களை மெதுவாகத் தேய்க்கவும்.
 • சிறந்த மென்மையான குதிகாலைப் பெறுவதற்கு இதனைத் தினமும் செய்ய வேண்டும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதனை உபயோகிப்பதன் மூலம், வெளிப்புற தோலில் இருந்து ஏற்படும் நீர் இழப்பைக் குறைக்கலாம். மேலும், இது சருமத்தை நீரேற்றமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். கம்பளி சாக்ஸ் கலவையின் செயல்திறனை அதிகரிப்பதுடன் உடலின் வெப்பத்தையும் சிக்க வைக்கும்.

 • வெதுவெதுப்பான நீரில் உங்கள் கால்களை 10-15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
 • இவற்றை pumice stone கொண்டு மெதுவாக தேய்க்கவும். பின், கால்களை நன்றாக உலர வைக்கவும்.
 • அதன் பின், பெட்ரோலியம் ஜெல்லியை கால்களில் தடவி, கம்பளி-சாக்ஸ் அணியவும்.
 • அவற்றை ஒரு இரவில் வைத்து, பின்னர் காலையில் தண்ணீரில் கழுவ வேண்டும். தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்கும்.

தேன்

தேன் ஆண்டிசெப்டிக்காக செயல்படக்கூடியதாகும். இதனால், இது காயங்களைக் குணமாக்கும் பண்பைக் கொண்டுள்ளது. மேலும், இது சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதன் இனிமையான பண்புகளால், உலர்ந்த மற்றும் விரிசலுடன் காணப்படும் குதிகால் விரைவாகக் குணமடையும்.

 • அரை வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கப் தேன் சேர்க்க வேண்டும்.
 • பின், உங்கள் கால்களைத் தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
 • இவ்வாறு தினம் செய்து வந்தால், பாதங்கள் மிருதுவாகவும், மென்மையாகவும் காணப்படும்.

கற்றாழை ஜெல்

கற்றாழையில் அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால், இது சருமத்தை மென்மையாக்க உதவும். உலர்ந்த மற்றும் இறந்த செல்களை நீக்குவதற்கு கற்றாழைப் பயன்படுகிறது. இது கொலாஜன் (Collagen) தொகுப்பை அதிகரிக்கிறது. மேலும், இது விரிசல் மற்றும் முகடுகளைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

 • வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அதில் சுமார் 15-20 நிமிடங்கள் வரை கால்களை ஊற வைக்கவும்.
 • பின், அதனை உலர்த்தி கற்றாழை ஜெல் எடுத்து, கால்களில் தடவவும்.
 • அதில் சாக்ஸ் போட்டு ஒரு இரவிற்கு விட்டு விடுங்கள்.
 • இது போல ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்துவதன் மூலம் வறண்ட சருமத்திற்கு விரைவாகத் தீர்வு காணலாம்.

இயற்கைத் தீர்வான பாரஃபின் மெழுகு

சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், மென்மையாக்குவதற்கும் பாரஃபின் மெழுகு ஓர் இயற்கையான மென்மையாக்கலாகச் செயல்படுகிறது. மேலும், இது எளிதான, பயனுள்ள தீர்வாகக் கருதப்படுகிறது. அதே போல, தேங்காய் எண்ணெயும் சருமத்தை ஹைட்ரேட் செய்து மென்மையாக்குகிறது. இதனால், தேங்காய் எண்ணெய் குதிகால்களின் வெடிப்புகளுக்கு சிறப்பு மருந்தாக உள்ளது.

 • 1 டீஸ்பூன் அளவிலான ஃபாரா மெழுகுடன், 2 முதல் 3 துளிகள் வரையிலான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை ஊற்றவும்.
 • அது ஒரு கலவையாக மாறும் வரை சூடாக்கவும்.
 • பின், அறைவெப்பநிலையில் அதனைக் குளிர்ந்து விடவும்.
 • இந்தக் கலவையைப் படுக்கைக்குச் செல்லும் முன்பு விரிசல் ஏற்பட்ட இடத்தில் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். 
 • மறுநாள் காலையில் அதனை எடுத்து விட வேண்டும்.
 • இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராகச் செயல்படுகிறது. இதனால், இதனை உலர்ந்த மற்றும் வெடிப்புகள் உள்ள குதிகாலுக்குத் தடவினால், ஈரப்பதத்துடன் காணப்படும். மேலும், இது உடலில் உள்ள ஈரப்பதத்தினைத் தணியாமல் பார்த்துக் கொள்ளவும், அவற்றினை இன்னும் அதிகமாக ஊட்டவும் வைத்திருக்க உதவுகிறது. இது ஒரு பயனுள்ள சிகிச்சையாகும்.

 • 2 டீஸ்பூன் அளவிற்குத் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதனை விரிசல் மற்றும் உலர்ந்த பகுதிகளில் தடவவும்.
 • பின், சாக்ஸ் அணிந்து ஒரே இரவில் விட்டு விடவும்.
 • மறுநாள் காலை வழக்கம் போல குளிக்க வேண்டும்.
 • பாதங்கள் மென்மையாகும் வரை இந்த முறையை சில நாள்களுக்கு மீண்டும் செய்யவும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை

கிளிசரினில் இயற்கையாக ஈரப்பதமூட்டும் பண்பு உள்ளது. இதனால், வெடிப்புள்ள குதிகால்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்தால், இறந்த செல்களை அகற்ற முடியும். இதனால், இதனை சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தலாம்.

 • ஒரே மாறி அளவுள்ள எலுமிச்சைச் சாறு மற்றும் கிளிசரின் கலந்து மென்மையான பேஸ்ட்டைத் தயாரிக்கவும்.
 • பின், பேஸ்ட்டை விரிசல் உள்ள பகுதிகளில் வைத்துத் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விடவும்.
 • பின்னர், அந்த இடத்தியக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.
 • இதன் மூலம் குதிகால் வெடிப்பிற்குச் சிறந்த தீர்வினைப் பெறலாம்.

குதிகால் வெடிப்பை எப்படி தடுக்கலாம்..?

 • குதிகாலில் வெடிப்பு உண்டாவதை கீழ்க்கண்ட முறைகளின் (how to cure cracked heels in tamil) மூலம் தடுக்கலாம்.
 • நீண்ட நேரம் நிற்பதையோ, நடப்பதையோ தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
 • தினமும் இரண்டு முறையாவது கால்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • கிரீம்கள், லோஷன்கள் மற்றும் களிம்புகளில் டிமெதிகோன், யூரியா, லானோலின், ஹைலூரோனிக் அமிலம், லாக்டிக் அமிலம், கிளிசரின் மற்றும் மினரல் ஆயில் போன்றவற்றைப் பயன்படுத்தி, சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
 • காலுக்கு ஏற்ற ஷூஸ் அல்லது செருப்புகளிய அணிய முயற்சி செய்யவும்.
 • நல்ல தரமான பருத்தி அல்லது கம்பளி சாக்ஸ் அணிய வேண்டும்.
 • நிறைய தண்ணீரிய உட்கொள்ளுவதன் மூலம், சருமத்தை மிருதுவாகவும், நீரேற்றமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
 • Pumice stone கொண்டு கால்களைத் தேய்க்கவும். ஆனால், pumice stone-ஐ அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனி, வெடிப்புள்ள குதி கால்களை மிகவும் மோசமாக்குகிறது. நீரிழவு நோயாளிகளாக இருந்தால், கால்சஸ்களை நாம் அகற்றக் கூடாது. இது நமது சருமத்திற்கு காயத்தை ஏற்படுத்தும். மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தை இது அதிகரிக்கும்.
 • கால்களை ஓய்வெடுக்க சில இயற்கையான எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், குதிகால்களில் வெடிப்புகள் ஆறுவதோடு, மென்மையான பாதங்களையும் (how to cure deep cracks in heels) பெறலாம்.

Tags:

How to Cure Cracked Heels at Home, best cure for cracked heels, how to cure cracked heels in tamil, how to cure deep cracks in heels, How to remove cracked heels at home in tamil, how to get rid of cracked heels at home in tamil, how to eliminate cracked heels naturally, home remedies to remove cracked heels, how to remove cracked heels permanently at home in tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்