Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

சினிமா நடிகைகள் மாதிரி ஸ்மூத்தான கைகளைப் பெறுவது இப்படித்தானா?

Nandhinipriya Ganeshan October 17, 2022 & 09:00 [IST]
சினிமா நடிகைகள் மாதிரி ஸ்மூத்தான கைகளைப் பெறுவது இப்படித்தானா?Representative Image.

தங்களுடைய சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்று தான் அனைத்து பெண்களின் விருப்பம். அதில் கைகள் தான் முக்கிய பங்கு வைக்கிறது. ஆனால், சூழ்நிலைகளும் காலநிலைகளும் அவர்களுக்கு சாதமாக இருப்பதில்லை. சில பெண்களுக்கு வீட்டில் வேலை செய்வதினாலையே கைகள் வறண்டு முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால், அதையும் ஒரு சில பெண்கள் பியூட்டி பார்லருக்கு சென்று கைகளை மென்மைப்படுத்தி கொள்கிறார்கள். இது எல்லா பெண்களுக்கும் பொருந்துவது கிடையாது. அதுமட்டுமல்லாமல், உடலில் இருக்கும் சில ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காரணமாகவும் உங்கள் சருமம் வறண்டுவிடும். 

வறண்டு கரடு முரடாக இருக்கும் கைகளை எப்படி மென்மையாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். இதை நீங்க தினமும் கடைப்பிடித்து வந்தாலே உங்களுடைய சருமம் பொலிவடைந்து மேலும் அழகை சேர்க்கும். இதை ஆண்களும் கடைப்பிடிக்கலாம்...

உங்க சரும ரொம்ப வறண்ட சருமமா? இத மட்டும் பண்ணுங்க.. அப்பறம் பாருங்க மாயாஜலத்த..

டிப்ஸ் - 1

விளக்கெண்ணெயுடன் சர்க்கரையை கலந்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பு கைகளில் தடவி ஒரு 5 நிமிடம் கைகளை முன்னும் பின்னும் நன்றாக தேய்த்து சோப்பு போடாமல் தண்ணீரில் கைகளை கழுவிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்த பின்னர் வேலை எதுவும் செய்யக்கூடாது. இப்படி தினமும் செய்து வந்தால் சீக்கிரம் கடினத்தன்மை மறைந்து மிருதுவான கைகள் கிடைக்கும். விளக்கெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான மற்றும் ஜொலி ஜொலிக்கும் சருமத்திற்கு 10 இயற்கை அழகு குறிப்புகள்...!

டிப்ஸ் - 2

காய்ச்சின பால் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் கிளசரின் மற்றும் எலுமிச்சை சாறு 4 துளிகள் சேர்த்து கலக்கி, கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கழுவிடுங்க. நாளடைவில் உள்ளங்கைகளில் இருக்கும் சொரசொரப்பு தன்மை நீங்கி மென்மையாக மாறிவிடும். 

கழுத்து, தொடை, அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையை போக்க ஒரே ஒரு பொருள் போதும்.. 

டிப்ஸ் - 3

சோள மாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து கைகளில் தேய்த்து மசாஜ் செய்து கழுவிடுங்க. ஒரு வாரத்தில் உங்கள் கைகள் மிருதுவாக மாறிவிடும். தக்காளி சாறு சிறிதளவு, எலுமிச்சை சாறு 5 சொட்டு, மற்றும் கிளசரின் சேர்த்து நன்றாக கலக்கி, கைகளில் தேய்த்து வெறும் தண்ணீரில் கழுவிக்கொள்ளுங்கள்.

 கூந்தல் கருமையாக செழித்து வளர தேங்காய் பால்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்