Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஒரே வாரத்தில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்... 

Nandhinipriya Ganeshan November 01, 2022 & 09:00 [IST]
ஒரே வாரத்தில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்... Representative Image.

ஆண், பெண் இருபாலருமே எதிர்கொள்ளும் மிகவும் தர்மசங்கடமான அழகு பிரச்சனைகளுள் ஒன்று அந்தரங்க பகுதி கருமையாக இருப்பது. இதற்கு காரணம் அப்பகுதியில் அதிகம் காற்றோட்டம் இல்லாமல் வியர்வை வெளியேறுவதால், இறந்த செல்கள் அவ்விடத்தில் எளிதில் நீக்க முடியாதவாறு தேங்கிவிடுவதே. அதுமட்டுமல்லாமல், ஷேவிங் செய்வதும் கருமையை ஏற்படுத்தும்.

செலவே இல்லாம இயற்கை முறையில் கழுத்தில் இருக்கும் கருமையை போக்கலாம்.... இத ட்ரை பண்ணுங்க..

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலிலேயே மிகவும் சென்சிடிவ்வான பகுதி என்றால் அது அந்தரங்க பகுதி தான். இப்பகுதியில் கண்ட கண்ட கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்தினால், அதனால் பக்கவிளைவுகள் ஏற்படும். எனவே, இப்பகுதியில் க்ரீம்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களை கொண்டு பராமரித்து வந்தால் அப்பகுதியில் எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாமல் கருமையை வெகு விரைவில் நீக்கிவிடலாம். இதை ஆண்களும் பின்பற்றலாம். 

எப்படி பல் தேய்ச்சாலும் மஞ்சளாவே இருக்கா..? ஒரே நாளுல முத்து போன்ற பற்களுக்கு இத பண்ணுங்க..!

ஒரே வாரத்தில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்... Representative Image

கற்றாழை:

கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1 சிட்டிகை இரண்டையும் கலந்து, அந்தரங்க பகுதியை சுற்றி தடவி அரை மணி நேரம் நன்றாக ஊறவைத்து, பின்னர் தண்ணீரில் நனைத்த பஞ்சை கொண்டு துடைத்து எடுத்துவிடுங்கள். இதை வாரத்திற்கு 3-4 முறை செய்துவந்தால் சீக்கிரத்திலேயே கருமை நீங்கிவிடும்.

கழுத்து, தொடை, அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையை போக்க ஒரே ஒரு பொருள் போதும்.. 

ஒரே வாரத்தில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்... Representative Image

தயிர்:

தயிரை தினமும் அந்தரங்க பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையை போக்கி, அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்கவும் உதவுகிறது.

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....

ஒரே வாரத்தில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்... Representative Image

கடலை மாவு:

கடலை மாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து, கருப்பான பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள். இப்படி வாரத்திற்கு 4-5 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...

ஒரே வாரத்தில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்... Representative Image

எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜூஸ்:

சரும கருமையை போக்க பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அழகு பொருள் தான் மஞ்சள். இதை எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு உடன் கலந்து நல்ல மாற்றம் தெரியும். அதற்கு 3 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் அல்லது 3 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அந்தரங்கப் பகுதியில் தடவி நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிடவும். இதை வாரம் 3-4 முறை செய்ய வேண்டும். 

தலையில பொடுகு போட்டு பிச்சி எடுக்குதா? இத ஃபாலோ பண்ணுங்க.. ஒரே வாரத்துல பொடுகு காணாம போய்டும்..

ஒரே வாரத்தில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்... Representative Image

தேங்காய் எண்ணெய்:

அந்தரங்கப் பகுதியில் உள்ள முடியை நீக்கிவிட்டு, பாலை கொண்டு அந்த இடத்தை துடைத்து எடுத்துவிடுங்கள். பின்னர், இரவு தூங்கச் செல்வதற்கு முன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை விரைவில் மறைந்துவிடும்.

குதிகால் வெடிப்பிற்கு சிம்பிளான வீட்டுவைத்தியம்.. இத மட்டும் செய்தால் போதும்..

ஒரே வாரத்தில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்... Representative Image

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கிற்கு கருமையை போக்கும் தன்மை உள்ளது. எனவே, உருளைக்கிழங்கை வெட்டி கருப்பாக இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் அந்தரங்க பகுதியில் இருக்கும் கருமை வெகு சீக்கிரமே நீங்கிவிடும். 

நோ ஷேவிங்.. நோ வேக்சிங்.. அக்குள் முடிகளை அகற்ற ஈஸியான டிப்ஸ்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்