தினமும் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி வரிசையில், இன்றைக்கு ஒரு ஸ்பெஷல் ரெசிபி மற்றும் புதுவிதமான மற்றும் கடைகளில் விற்கும் வெஜிடபிள் பப்ஸ் போன்று ஒரு ரெசிபி. அனைவருக்கும் பிடிக்கும்.
✤ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும். இது பேக்கரில் உள்ள பப்ஸ் சாப்பிடுவது போல் இருக்கும். இந்த பதிவில் மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி பிரட் ஸ்பிரிங் ரோல் செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ உருளைக்கிழங்கு – 6
✤ வெங்காயம் – 4
✤ இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
✤ மிளகாய்த் தூள் – 2ஸ்பூன்
✤ மைதா மாவு – 1 கப்
✤ கரமசாலா – 1ஸ்பூன்
✤ மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
✤ மல்லித்தூள் – 1ஸ்பூன்
✤ பச்சைப் பட்டாணி – 1கப்
✤ கொத்தமல்லி- சிறிதளவு
✤ எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
✤ பிரட் – 10
✤ பிரட் தூள் – 3கப்
✤ உப்பு – தேவையான அளவு
✤ எண்ணெய் – 3கப்
✤ முதலில் உருளைக்கிழங்கு எடுத்து அதைத் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை இரண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தண்ணீரில் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
✤ ஒரு கப் அளவிற்கு மைதா மாவு எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து நன்றாகப் பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். பிரட் எடுத்து அதில் உள்ள அனைத்து ஓரங்களை வெட்டிக் கொள்ள வேண்டும்.
✤ உருளைக்கிழங்கு வெந்த உடன் எடுத்து அதைத் தோல் உரித்து அதை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
✤ வெங்காயம் எடுத்துத் தோல் உரித்து நன்றாகக் கழுவி, அதை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
✤ கொத்தமல்லி தலை எடுத்துக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடான பின், அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
✤ வெங்காயம் பொன்னிறமாக வந்த உடன் அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
✤ அதற்குப் பின், ஒரு கப் அளவிற்குப் பச்சைப் பட்டாணியை எடுத்து நன்றாகக் கழுவி, அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
✤ அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு, மிளகாய்த் தூள் மற்றும் கரமசாலா ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
✤ அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤ அதில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி விட்டு, ஒரு தட்டு அல்லது மூடி போட்டு மூடி வைக்கவும். அது ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
✤ அதற்குப் பின்,காய் நன்றாக வெந்த பின், அதில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
✤ அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤ புளிப்பு தன்மை வேண்டும் என்றால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சிறிது நேரம் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
✤ அதற்குப் பின் மசாலா பதத்திற்கு, வந்த உடன் அடுப்பை அணைத்து பாத்திரத்தைக் கீழே இறக்கவும்.
✤ வெட்டி வைத்த பிரட்டை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்துத் தேய்த்து அதில் ஒரு ரோல் போல் உருட்டிக் கொள்ளவும். அந்த பிரட் நடுவில் சமைத்த மசாலாவை சேர்த்து நன்றாக ரோல் போல் கைகளில் உருட்ட வேண்டும்.
✤ உருட்டிய ரோலை எடுத்து கரைத்து வைத்த மைதா மாவில் சேர்த்து முழுக்கி எடுக்க வேண்டும். அதன் பின், அதில் பிரட் தூள் தூவி அல்லது பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
✤ மற்றொரு பாத்திரத்தில் பொரிப்பதற்குத் தேவையான அளவிற்கு எண்ணெய் இரண்டு அல்லது மூன்று கப் சேர்த்து நன்றாகச் சூடாக்க வேண்டும்.
✤ எண்ணெய் சூடான பின், தட்டில் உருட்டி வைத்த ரோலை எடுத்து எண்ணெய் போட்டுப் பொரித்து எடுத்தால் சூடான மற்றும் சுவையான ஒரு மாலை ஸ்நாக்ஸ் தயார்.
✤ இதை மாலையில் குழந்தைகளுக்குக் கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை வீட்டிலேயே எளிமையாகச் செய்து சாப்பிடலாம். இந்த ஸ்நாக்ஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…