Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

தீபாவளி ஸ்பெஷல்: குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..

Nandhinipriya Ganeshan October 18, 2022 & 10:00 [IST]
தீபாவளி ஸ்பெஷல்: குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..Representative Image.

சாக்லேட் கேக் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதனால், நம்மில் பலரும் அவ்வப்போது பேக்கரிக்கு சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால், சாக்லேட் கேக்கை நாம் வீட்டிலேயே செய்ய நினைத்தாலும் அதற்கு ஓவன் இருந்தால் தான் செய்ய முடியும் என்று விட்டுவிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் குக்கரே போதும் மென்மையான பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ஈசியாக செய்யலாம். இப்போது குக்கரில் சாக்லேட் கேக் செய்வது என்று ஸ்டெப் பை ஸ்டெப் பார்க்கலாம்.

தீபாவளி ஸ்பெஷல்: குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..Representative Image

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்

பேக்கிங் சோடா – 1¼ ஸ்பூன்

கோகோ பவுடர் – ¼ கப்

பட்டர் – ¼ கப்

சர்க்கரை – ¾ கப்

முட்டை – 2

பால் – ¼ கப் (காய்ச்சின பால்)

வெண்ணிலா எசன்ஸ் – ½ ஸ்பூன்

6 இன்ச் கேக் பேன்

தீபாவளி ஸ்பெஷல்: குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..Representative Image

செய்முறை:

➤ ஒரு பாத்திரத்தில், மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சலித்து, கலந்து வைத்து கொள்ளுங்கள்.

➤ மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை முட்டையை கலக்க பயன்படுத்தும் கலக்கியை (whisk) கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். எலக்ட்ரிக் பீட்டர் இருந்தாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

➤ இப்போது, அந்த கலவையில் முட்டையை உடைத்து ஊற்றி அதையும் கட்டிவிழாமல் நன்றாக அடித்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர், கோகோ பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளுங்கள். பின், பால் சேர்த்து எல்லாப் பொருளும் கலக்கும் வரை மீண்டும் அடிக்கவும்.

➤ இப்போது நாம் கலந்து வைத்திருந்த மைதா மாவு கலவையை சேர்த்து ஸ்மூத் பேஸ்ட்டாக வரும் வரை அடித்துக் கொள்ளவும்.

➤ அவ்வளவு தான். இதை கேன் பேனில் ஊற்றிக் கொள்ளவும். இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதன் நடுவில் ஸ்டாண்ட் ஒன்றை வைத்து குக்கரை மூடி விசில் போடாமல் 3 நிமிடங்கள் சூடேற்றவும்.

➤ பின்னர், மூடியை திறந்து கேக் பேனை அந்த ஸ்டாண்டின் மீது வைத்து குக்கரை மூடி, குறைந்த தீயில் 40 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

➤ 40 நிமிடங்களுக்கு பிறகு மூடியை திறந்து பல்குத்தும் குச்சியை கேக்கில் விட்டு பாருங்கள். கேக் ஒட்டாமல் வர வேண்டும். அப்படி ஒட்டினால், இன்னும் சிறிது நேரம் வேகவைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது, கேக் பேனை எடுத்து ஒரு தட்டில் மெதுவாக கவிழ்த்து, ஆற வைத்து வெட்டி பரிமாறவும்.

➤ அவ்வளவு தாங்க..மென்மையான பஞ்சுபோன்ற சாக்லேட் கேட் ரெடி..! இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனும் சாப்பிடலாம். இனி கடைக்கு போய் கேக் வாங்கனும் அவசியமில்லை. நீங்களே செய்யலாம்.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளி பலகாரம்! மாவு பதம் முதல் வேகவைக்கும் முறை வரை சுவையான வெல்ல அதிரசம் செய்வது எப்படி?

தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தீபாவளி ஸ்பெஷல்! குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

தீபாவளி பலகாரம்! இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்