Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி: அவல் இருக்கா? சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...

Nandhinipriya Ganeshan October 06, 2022 & 18:43 [IST]
மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி: அவல் இருக்கா? சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...Representative Image.

மழைக்காலம் வந்துவிட்டாலே நம் நாக்கு சூடாக ஏதோ ஒரு ஸ்நாக்ஸை தேடிக்கொண்டே இருக்கும். அதற்காகவே, வீட்டில் அம்மாக்கள் மாலை வேளையில் போண்டா, பஜ்ஜி, வடை போன்றவற்றை செய்வார்கள். எப்போதும் ஒரே மாதிரியான பலகாரங்களை சாப்பிட்டு நிச்சயம் போர் அடித்துவிடும். எனவே, நம்மில் பலரும் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யூடியூப்பை அலாச ஆரம்பித்துவிடுவோம். அப்படி ஒரு வித்தியாசமான ரெசிபியை இப்போது பார்க்கப் போகிறோம். வெறும் உருளைக்கிழங்கு, அவல் மற்றும் சில மசாலா பொருட்களை வைத்து அவல் நக்கெட்ஸ் செய்யலாம் வாங்க. இதை செய்யும் போது அதிகளவில் எண்ணெய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. 

பஜ்ஜி மாவு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் மொறு மொறு பஜ்ஜி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

பெரிய வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)

வேக வைத்த பட்டாணி - 1/4 கப்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

வேக வைத்த உருளைக்கிழங்கு - 2

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

உப்பு தேவையான அளவு

குடைமிளகாய் - 1/2

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

பிரட் தூள் - 4 டேபிள் ஸ்பூன் 

KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்.. 

மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி: அவல் இருக்கா? சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...Representative Image

செய்முறை:

➤ முதலில் அவலை எடுத்துக்கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். பின்னர் 2 நிமிடம் வரை ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி மற்றொரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

➤ ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து பிசைந்து, அத்துடன் எடுத்த வைத்த அவலையும் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

➤ இப்போது வெங்காயம், குடைமிளகாய், கொத்தமல்லி இலை, பட்டாணி ஆகியவற்றை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்துக் கொள்ளவும். 

➤ பின்னர் அந்த கலவையுடன் சீரகப் பொடி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து, அத்துடன் அரிசி மாவையும் சேர்த்து மாவாக வரும் வரையில் கைகளால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

➤ பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறிது சிறிதாக மாவை எடுத்து கைகளால் உருண்டை பிடித்துக் கொள்ளவும். இப்போது மற்றொரு கிண்ணத்தில் சோள மாவை எடுத்து அதில் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

➤ பின்னர், உருட்டி வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக முதலில் அந்த சோள மாவு கலவையில் முக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் பிரட் துகள்களில் பிரட்டி எடுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்படி எல்லா உருண்டைகளையும் ரெடி பண்ணி வைத்துக் கொள்ளவும்.

➤ இப்போது ஒரு கடாயில் 3 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு காய்ந்தது, நாம் தயார் செய்து வைத்துள்ள அவள் நக்கெட்களை லேசாக ஃப்ரை செய்ய வேண்டும். நக்கெட்ஸ் பொன்னிறத்தில் வந்ததும் எடுத்தால் சுவையான மொறு மொறு அவல் நக்கெட்ஸ் ரெடி. 

➤ இதை மயோனஸ், புதினா சட்னி, அல்லது தக்காளி உடன் சேர்த்து பரிமாறலாம். நன்றாக மழை பெய்து கொண்டிருக்கும்போது சுட சுட டீயுடன் இந்த மொறு மொறு நக்கெட்ஸ் மிக அருமையான காம்போவாக இருக்கும்.

Also Read: 

சுவையான நாட்டுக்கோழி பிரியாணி குழையாமல் செய்வது எப்படி? 

மொறு மொறு சமோசா இப்படி செஞ்சி பாருங்க...!!

ஆல் டைம் ஃபேவரட்! ரோட்டுக்கடை பானிபூரி வீட்டிலேயே செய்யலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்