வால்நட் சாக்லேட் பிரவுனி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக் வகைகளில் இதுவும் ஒன்று. பொதுவாக இதை ஐஸ்கிரீமுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். அதுவும் முட்டை இல்லாமல் செய்வதால் அனைவரும் சாப்பிடலாம். இந்த தீபாவளிக்கு இப்டி புதுசா செஞ்சி கொடுங்க. அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்த ரெசிபி செய்வதற்கு ஓவன் கூட தேவையில்லை, வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.
டார்க் சாக்லெட் - 1/2 கப்
கோகோ பவுடர் - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பாதாம், பிஸ்தா, வால்நட் - தேவையான அளவு
வெண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை பவுடர் - 3/4 கப்
பால் - 1/2 கப் (காய்ச்சிய பால்)
மைதா - 1 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
➤ முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். அதன் மீது இன்னொரு பாத்திரத்தில் வைத்து டார்க் சாக்லேட் துண்டுகளை சேர்த்து உருக வைக்கவும். எப்பவும் சாக்லேட் உருகுவதற்கு இந்த ட்ரிக்கை பின்பற்றுங்கள். ஏனென்றால், அப்படியே சாக்லேட்களை பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தால் ஒட்டிக்கொள்ளும்.
➤ இப்போது சாக்லேட் நன்றாக உருகியதும் அதில் உருக்கிய வெண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பின்னர், அதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.
➤ பின்பு, மைதா, கோகோ பவுடர், சர்க்கரை பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சலித்து, சாக்லேட், வெண்ணெய் கலவையோடு சேர்த்து கலந்துவிடுங்கள். நன்றாக கலக்கியதும், காய்ச்சின பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துவிடுங்கள்.
➤ இதோடு வெண்ணிலா எசன்ஸையும் கலந்துவிட்டு பாதாம், பிஸ்தா, வால்நட் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கலந்துக்கொள்ளுங்கள். அவ்வளவு பிரவுனி செய்ய தேவையான கலவை ரெடி.
➤ இப்போது 7 இன்ச் கேக் பேனை எடுத்து அதன் உள்புறம் முழுவதும் வெண்ணெயை தடவி விடுங்கள். இப்போது அந்த கலவையை பேனில் ஊற்றி, மேல்புறம் சமமாக இருக்குமாறு சரி செய்து, லேசாக தட்டிவிடுங்கள். பின்பு, அதன் மீது பாதாம், பிஸ்தா, வால்நட் ஆகியற்றை தூவி விடுங்கள்.
➤ ஒரு அகலமான மூடியுடன் கூடிய அடிகனமான பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றாமல் அடுப்பில் வைத்து 5 நிமிடம் சூடாக்கிக் கொள்ளுங்கள். பின், அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன்மீது இந்த பேனை வைத்து மூடி போட்டு மூடிவிடுங்கள். குக்கரில் கூட இதுபோல செய்யலாம்.
➤ மிதமான தீயில் 45 நிமிடங்கள் வேக விடுங்கள். 45 நிமிடம் கழித்து ஒரு பல் குத்தும் குச்சியை பிரவுனியில் குத்தி பாருங்கள். ஒட்டாமல் வந்தால் ஓகே, அதுவே ஒட்டினால் மேலும் 10 நிமிடம் வேகவிடுங்கள்.
➤ பின்பு, வெளியே எடுத்து பேனின் ஓரங்களில் கத்தியை விட்டு இடைவெளி ஏற்படுத்தி, ஒரு தட்டில் அப்படியே மெதுவாக கவிழ்த்தால் சுவையான வால்நட் சாக்லேட் பிரவுனி ரெடி. கத்தியால் பிரௌனியை சதுரங்களாக வெட்டி, அதன் மீது ஐஸ்கிரீமை உருண்டையாக வைத்து சுவைத்து பாருங்கள். அருமையாக இருக்கும்.
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:
தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..
வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..
தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க..
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?
புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...
பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..
தீபாவளி ஸ்பெஷல்! குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..
தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும் நாலே பொருள்...
தீபாவளி ஸ்பெஷல்! மாவு பதம் முதல் வேகவைக்கும் முறை வரை சுவையான வெல்ல அதிரசம் செய்வது எப்படி?
தீபாவளி ஸ்பெஷல்! முட்டை & ஓவன் இல்லாமல் ருசியான சாக்லேட் பிரவுனி வீட்டிலேயே செய்வது எப்படி?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…