மார்கழி மாதம் பிறந்தாச்சு இனி தினமும் கோவில்தான் தினமும் பிரசாதம் தான் அப்பூரம் என்ன சுவையான பிரசாதம் செய்ய நெய் தயார் செய்ய வேண்டியதுதான் . நம்ம வீட்டிலேயே நெய் செய்து ஆரோக்கியத்துடன் பயன்படுத்தலாம் . இந்த குளிர்காலத்தில் சூடான சுவையான சுவீட் செய்து சாப்பிட நெய் செய்யலாம் வாங்க .
நெய் என்றாலே அதன் மனம்தான் எல்லோருக்கும் நினைவில் வரும் . ஆனால் இதில் அதிக நன்மைகள் உள்ளன என்பது தெரியாத ஒன்றாகும். நெய்யில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது .இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற அமிலங்களைக் குறைக்கும் ,ரத்தையைச் சுத்தப்படுத்தும் . எலும்புக்கு மிக நல்லது . இது போன்ற பல நன்மைகள் உள்ளன. குழந்தைகளுக்கு நெய்யானது அதிக நன்மையைத் தரும் அதனால் இதை எப்படிச் செய்து உபயோகப்படுத்தலாம் எனப் பார்க்கலாம். வாங்க . மேலும் இதை எப்படிப் பாதுகாப்பது என்பதையும் பார்க்கலாம் .
* கைகளால் இதைத் தொடாமல் இருக்க வேண்டும்
* திறந்து வைப்பதைத் தவிர்ப்பது நல்லது கேட்டு போகாமல் இருக்க உதவும்
* குளிர்பானத்தில் வைத்துப் பயன்படுத்தலாம்.
பாலாடைகள் வேண்டிய அளவில்
உரை மோர்
ஐஸ் கியூப்
முருங்கை கீரை அல்லது கருவேப்பிலை
பாலாடையை எடுத்து அதில் உரை மோர் ஊற்றி அதை வெயிலில் உறைய விட வேண்டும் .
பின் அதை எடுத்து குளிர்பானத்தில் வைக்கவும் . அரை மணி நேரம் பிறகு அதை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து பின் அதை மோர் தனியாகவும் வெண்ணெய் தனியாகவும் எடுத்து வைக்கவும்.
பின் வெண்ணெயை எடுத்து அதைக் கடாயில் சேர்த்து உரைக்க வேண்டும் நன்றாக உருக்கிய பின் அதில் முருங்கை கீரை அல்லது கருவேப்பிலை ஏதாவது ஒன்று சேர்த்து .பின் அதை ஆற விட்டு எடுக்கவும் பின் அதை ஒரு காற்று புகாத பாத்திரத்தில் மாற்றி மூடி வைக்கவும் . மூடி வைத்த நெய் அனைத்து மஞ்சள் நிறத்தில் ஆனாவுடன் அதைப் பயன்படுத்தலாம் .
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…