Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

Instant Oats Dosa Recipe in Tamil | உடலுக்கு ஆரோக்கியம் தர இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை செய்வது எப்படி?

Priyanka Hochumin Updated:
Instant Oats Dosa Recipe in Tamil | உடலுக்கு ஆரோக்கியம் தர இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை செய்வது எப்படி?Representative Image.

வாரம் முழுவதும் அலைந்து திருந்து வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டிலும் வேலை ஓய்வதில்லை. அதுவும் காலையில் சாப்பாடு செய்வது கூடுதல் வேலை. இருப்பினும் அரிசி மாவு இருந்தால் இட்லி, தோசை செய்து சாப்பிடலாம். ஒருவேளை அதுவும் இல்லை என்றால் என்ன செய்வது? அதுக்கு தான் 5 நிமிடத்தில் ரெடியாகும் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை ரெசிபி இருக்கே. இதற்கு ஓட்ஸ், சிறிது அரிசி மாவு இருந்தால் போதும். நேரமும் மிச்சம், வேலையும் சீக்கிரம் முடியும், உடலுக்கும் ஆரோக்கியமா இருக்கும். ஒரே கல்லுல மூணு மாங்காணே சொல்லலாம்.

இந்த இன்ஸ்டன்ட் ஓட்ஸ் மாவை எப்படி ரெடி செய்யலாம் என்று இந்த பதிவில் பாப்போம். இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

Instant Oats Dosa Recipe in Tamil | உடலுக்கு ஆரோக்கியம் தர இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை செய்வது எப்படி?Representative Image

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1/2 கப்

ரவை - 1/4 கப்

அரிசி மாவு - 1/4 கப்

மோர் - 1/4 கப்

தண்ணீர் - 2 கப்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

Instant Oats Dosa Recipe in Tamil | உடலுக்கு ஆரோக்கியம் தர இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை செய்வது எப்படி?Representative Image

செய்முறை:

முதலில் ஓட்ஸை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அத்துடன் ரவை, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கையால் நன்கு கிளறி விடவும்.

இப்போது அதில் மோர், தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கிளறவும்.

கூடுதல் சுவைக்காக வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

அவ்ளோ தான் மாவு ரெடி. இப்போது அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை சூடேற்றவும். கல் சூடான உடன் தயாரித்து வைத்த இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை மாவை ஒரு கரண்டி எடுத்து அதன் மீது ஊற்றி தோசை மாறி சுட்டு எடுக்கவும்.

சுவையான, ஹெல்த்தியான ஓட்ஸ் தோசை தயாராகி விட்டது. வாரத்தில் 2 அல்லது 3 முறை இப்படி சாப்பிட்டால் உடலை ஆரோக்கியத்திற்கு எந்த தொந்தரவும் வராது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்