Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Masala Pasta Recipe in Tamil | டேஸ்டியான மசாலா பாஸ்தா 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

Priyanka Hochumin Updated:
Masala Pasta Recipe in Tamil | டேஸ்டியான மசாலா பாஸ்தா 10 நிமிடத்தில் செய்வது எப்படி?Representative Image.

நாம் தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அழுத்து போய்விட்டதா? குழந்தைகளுக்கு பிடித்த மாறி டின்னர் சமைக்க ஏதாவது ஐடியா வேணுமா? இருக்கு! 10 நிமிடத்தில் வீட்டில் பாஸ்தா பயன்படுத்தி சுவையாக சமைத்து சாப்பிடலாம். பொதுவாக பாஸ்தா சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் அப்படி இல்லை, நாம் தினமும் சமைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி சத்தான மற்றும் சுவையான பாஸ்தா செய்து சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய உணவாகும்.

இந்த பாஸ்தாக்கு தேவையான பொருள் மற்றும் எப்படி செய்வது என்ற குறிப்புகளை இந்த பதிவில் பாப்போம். இதை நீங்கள் காலை பிரேக் பாஸ்ட் அல்லது இரவு டின்னருக்கும் செய்து சாப்பிடலாம்.

Masala Pasta Recipe in Tamil | டேஸ்டியான மசாலா பாஸ்தா 10 நிமிடத்தில் செய்வது எப்படி?Representative Image

தேவையான பொருட்கள்:

மக்ரோனி பாஸ்தா - 1 கப்  

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப் 

நறுக்கிய தக்காளி - 2

நறுக்கிய குடைமிளகாய் - 1/4 கப் 

நறுக்கிய கேரட் - 1

நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன் 

சீரகம் - 1/2 ஸ்பூன்

கரம் மசாலா - 3/4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி -  சிறிதளவு

Masala Pasta Recipe in Tamil | டேஸ்டியான மசாலா பாஸ்தா 10 நிமிடத்தில் செய்வது எப்படி?Representative Image

செய்முறை:

முதலில் தக்காளியை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்கும் போது அதில் பாஸ்தாவை போட்டு, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

அடுப்பை அணைத்து பாத்திரத்தில் இருக்கும் அதிகப்படியான நீரை எடுத்து, அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசவும். பின்னர் அதனை வடிகட்டி தனியாக வைக்கவும்.

அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றவும். அது சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து கேரட் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இப்போது அரைத்த தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு குடைமிளகாயும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

இறுதியாக எடுத்து வாய்த்த பாஸ்தாவை இத்துடன் சேர்த்து கிளறி இறக்கி விடவும். கடைசியாக வாசனைக்கு கொத்தமல்லியை தூவி பரிமாறலாம்.

அவ்ளோ தான் டேஸ்டியான ஹெல்த்தியான மசாலா பாஸ்தா தயாராகிவிட்டது. சூடு குறையும் முன்பு அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு மகிழுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்