முட்டை என்றாலே, அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். அதிலும், முட்டை குழம்பை விரும்பி சாப்பிடுவோர் பலர். முட்டை குழம்பு என்றால், சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முட்டை குழம்பானது பல்வேறு விதமாக செய்யப்படுகிறது. முட்டையை வேக வைத்து உண்ணும் போது, அது பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது. உடைத்த முட்டை குழம்பு, கிராமத்து முட்டை குழம்பு, செட்டிநாடு முட்டை குழம்பு, முட்டை குழம்பு கிரேவி என பல்வேறு வகைகளில் முட்டை குழம்பு செய்யப்படுகிறது. இவை அனைத்துமே ஏதாவதொரு வகையில் வெவ்வேறு விதமாக செய்யப்படுகின்றன. சரி, இதில் கிராமத்து முட்டை குழம்பு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
முட்டை – 3
தக்காளி – 1 (நறுக்கியது)
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்கத் தேவையான பொருள்கள்
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ½ துண்டு
பூண்டு – 4 அல்லது 5 பற்கள்
வரமிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – ½ டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
குழம்பு தாளிக்கத் தேவையானவை
பட்டை – ½
கறிவேப்பிலை – 1 கொத்து
கிராம்பு – 1
✤ முதலில், பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் முட்டைகளை வேக வைப்பதெற்கென தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
✤ பின் முட்டைகளை அதில் போட்டு, வேக வைத்து முட்டையின் மேல் உள்ள ஓடுகளை உடைக்க வேண்டும்.
✤ பிறகு முட்டையை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
✤ அடுப்பில், வாணலி ஒன்றை எடுத்து வைத்து அதில் மேலே அரைப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொண்டு, பின் மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
✤ அதன் பின், அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். இவ்வாறு காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
✤ இவ்வாறு தாளித்து பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
✤ வதக்கிய பின், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்டை (சாந்து) சேர்த்து, நன்றாக கிளறி விட வேண்டும்.
✤ இவ்வாறு 3- 4 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு இறக்கி விடலாம்.
✤ பிறகு, அதில் ½ கப் முதல் 1 கப் அளவிலான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இத்துடன் கரம் மசாலா மற்றும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இவ்வாறு கொதிக்க வைத்து இறக்கினால், சூப்பரான சுவையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு தயாராகி விடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…