பொதுவாக, பஞ்சாமிர்தம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும், பழனி பஞ்சாமிர்தத்திற்கென தனி ஒரு சுவை உண்டு. அறுசுவை மிக்க பழனி பஞ்சாமிர்தத்தை வாங்குவதற்கு, பல கோடி மக்கள் காத்திருப்பர். இத்தகைய அருஞ்சுவை மிக்க பழனி பஞ்சாமிர்தத்தை அதே சுவையுடன் வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி பஞ்சாமிர்தம் செய்வது என்பதை இதில் பார்க்கலாம்.
மலை வாழைப்பழம் அல்லது வாழைப்பழம் – 6
உலர்ந்த திராட்சை – ¼ கப்
பேரீட்சை – 20
நெய் – 2 டீஸ்பூன்
தேன் – ½ கப்
பனங்கற்கண்டு – ¼ கப்
வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை – ½ கப்
ஏலக்காய் – 2
✤ முதலில், பேரீச்சம்பழத்தைப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
✤ ஏலக்காயைப் பொடித்து வைத்து அதனைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
✤ வாழைப்பழத்தை தோல் உரித்து, அதனை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
✤ அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வாழைப்பழம், பேரீட்சை, காய்ந்த திராட்சை, நாட்டுச் சர்க்கரை, தேன், பொடித்து வைத்த ஏலக்காய், பனங்கற்கண்டு உள்ளிட்டவற்றைச் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
✤ அதன் பிறகு, கடைசியாக நெய் சேர்த்துக் கலக்கிக் கொள்ளலாம்.
✤ இப்போது சுவையான பஞ்சாமிர்தம் தயார் செய்த பிறகு முருகனுக்குப் படைத்துப் பின் பரிமாறலாம்.
✤ சுவையான மற்றும் சத்தான பழனி பஞ்சாமிர்தம் தயாராகி விடும்.
✤ இதனை வெளியில் 1 நாள் வரை வைத்து உண்ணலாம். பிரிட்ஜில் வைத்து உண்ண விரும்பினால், 3 அல்லது 4 நாள்கள் வரை வைத்து உண்ணலாம்.
பழனி பஞ்சாமிர்த சுவையில், வீட்டிலேயே பஞ்சாமிர்தம் தயாராகி விட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…