Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் 30 நிமிடத்தில் தித்திப்பான சுவையில் மிருதுவான ரசகுல்லா.. இப்டி செஞ்சி பாருங்க..

Nandhinipriya Ganeshan October 20, 2022 & 15:00 [IST]
தீபாவளி ஸ்பெஷல்: வெறும் 30 நிமிடத்தில் தித்திப்பான சுவையில் மிருதுவான ரசகுல்லா.. இப்டி செஞ்சி பாருங்க..Representative Image.

ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதுவும் பாலில் செய்யும் ஸ்வீட் என்றால் சுவை ஒருபடி மேல். அந்தவகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சாப்பிடும் ஒரு பால் ஸ்வீட் தான் ரசகுல்லா. இந்த ரசகுல்லா செய்முறையில் சில டிரிக்ஸ் இருக்கிறது. அதை பின்பற்றி செய்தாலே ரசகுல்லா மிக எளிமையாகவும் மிருதுவாகவும் செய்துவிடலாம். சரி, வாங்க சுவையான ரசகுல்லா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் 30 நிமிடத்தில் தித்திப்பான சுவையில் மிருதுவான ரசகுல்லா.. இப்டி செஞ்சி பாருங்க..Representative Image

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 1 கப்

எலுமிச்சை பழம் - 1

பாதாம், பிஸ்தா- தேவையான அளவு

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு பால் பொருள் ஒத்துக்காது என்றால், பால் பயன்படுத்தாமல் தயார் செய்யப்பட்ட பன்னீரைக் கொண்டு ரசகுல்லா செய்யலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

பாலே இல்லாமல் பன்னீர் செய்வது எப்படி?

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் 30 நிமிடத்தில் தித்திப்பான சுவையில் மிருதுவான ரசகுல்லா.. இப்டி செஞ்சி பாருங்க..Representative Image

செய்முறை:

➤ முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பால் நன்றாக கொதித்தவுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்துவிடவும். பால் திரிய ஆரம்பிக்கும். 

➤ பாலினை அவ்வப்போது கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு சுத்தமான வெள்ளைத் துணியில் கொட்டி நன்றாக அழுத்தி தண்ணீர் இல்லாமல் பிழிந்து 1 மணிநேரம் கட்டித் தொங்கவிடவும்.

➤ பின்பு, நன்றாகப் பிழிந்து எடுத்து பன்னீரை மிருதுவாக வரும்வரை பிசையவும். இப்போது, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டால் சர்க்கரை பாகு ரெடி.

➤ பிறகு பிசைந்த பன்னீரை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் சர்க்கரை பாகில் போட்டு குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். உருண்டை கொஞ்சம் பெரிதானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

➤ அவ்வளவு தான், சுவையான ரசகுல்லா ரெடி. தயாரான ரசகுல்லாவின் மீது பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு, பிஸ்தாவை தூவிட்டு 5 மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு எடுத்து பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று சாப்பிட்டாலும் சுவை வேற லெவலில் இருக்கும். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளி பலகாரம்! மாவு பதம் முதல் வேகவைக்கும் முறை வரை சுவையான வெல்ல அதிரசம் செய்வது எப்படி?

தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

தீபாவளி ஸ்பெஷல்! குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

தீபாவளி பலகாரம்! இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்