Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan October 12, 2022 & 19:00 [IST]
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: சுவையான ரசமலாய் செய்வது எப்படி?Representative Image.

ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதுவும் பாலில் செய்யும் ஸ்வீட் என்றால் சுவை ஒருபடி மேல். அந்தவகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சாப்பிடும் ஒரு பால் ஸ்வீட் தான் ரசமலாய். ரசகுல்லா போன்றே ரசமலாயும் பாலிலிருந்து பன்னீரை தனியாகப் பிரித்தெடுத்து செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த ரசமலாய் செய்முறையில் சில டிரிக்ஸ் இருக்கிறது. அதை பின்பற்றி செய்தாலே ரசமலாய் மிக எளிமையாக செய்துவிடலாம். சரி, வாங்க சுவையான ரசமலாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்... 

தேவையான பொருட்கள்:

பன்னீர் செய்ய:

கொழுப்பு நிறைந்த பால் - 2 லிட்டர்

எலுமிச்சை பழம் - 1/2

ரப்டி செய்ய:

சர்க்கரை - 1/2 கப்

பால் - 1 லிட்டர்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

குங்குமம்பூ - சிறிதளவு

பாதாம் பருப்பு - 20 கிராம் (பொடியாக நறுக்கியது)

பிஸ்தா பருப்பு - 20 கிராம் (பொடியாக நறுக்கியது)

ரசமலாய் செய்ய:

மைதா - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

பொடித்த பாதம் & பிஸ்தா - தேவையான அளவு

தீபாவளி ஸ்பெஷல்! 4 வகையான பர்ஃபி ரெசிபீஸ்..

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: சுவையான ரசமலாய் செய்வது எப்படி?Representative Image

செய்முறை:

➤ பன்னீர் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றி சுண்டக் காய்ச்சி கொள்ளவும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு 1/2 எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட்டு, பால் திரிந்ததும் ஒரு வெள்ளை துணியில் போட்டு தண்ணீரை நன்றாக பிழிந்துவிட்டு அதை அப்படியே அரை மணி நேரம் கட்டி வைக்கவும்.

➤ இப்போது மற்றொரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை சேர்த்து, பாதியாக சுண்டியதும் 1/2 கப் சர்க்கரை, 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி, 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும். பின்னர், அதோடு பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அடுப்பை அணைத்து ஆறவிடுங்கள்.

➤ அரை மணி நேரம் கழித்து துணியில் கட்டிய பன்னீரை தட்டில் கொட்டி நன்கு பிசைந்து கொள்ளவும். அத்துடன் 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து பன்னீர் மென்மையாக வரும் வரை பிசையவும். 

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

➤ இப்போது அதை சின்ன சின்ன உருட்டி தட்டி கொள்ளவும். பின்னர், ஒரு பிரஷர் குக்கரில் 1 கப் சர்க்கரை, 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 

➤ அதன்பின், நாம் தயாரித்து வைத்துள்ள ரசமலாய் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். பின்னர், ரசமலாய்களை லேசாக பிழிந்து எடுத்து தயார் செய்து வைத்துள்ல ரப்டியில் சேர்த்து 5 மணி நேரம் ஊர வைக்கவும். 

➤ 5 மணி நேரத்திற்கு பிறகு ரசமலாயை ஒரு கிண்ணத்தில் போட்டு ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து ஜில்லென்று சாப்பிட்டால் கூடுதல் சுவையை அனுபவிக்கலாம். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்