Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயாசம்.. வீட்டிலேயே செய்யலாம்.. 

Nandhinipriya Ganeshan November 16, 2022 & 18:00 [IST]
சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயாசம்.. வீட்டிலேயே செய்யலாம்.. Representative Image.

கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு போய் ஐயப்பனை தரிசித்து வருவார்கள். அங்கு வழங்கப்படும் சபரிமலை பிரசாதம் அரவணப் பாயாசம் என்றால் தனி சிறப்புண்டு. இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 200 கிராம்

வெல்லம் - 1 கிலோ

நெய் - 250 மில்லி

ஏலக்காய் பொடி - 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், வெல்லத்தை கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகுக் காய்ச்சிக் கொள்ளுங்கள். இப்போது, ஊறவைத்த அரிசியை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

அதேசமயம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி இறக்கினால், சூப்பரான சபரிமலை அரவணாப் பாயாசம் ரெடி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்