Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

How to Make Sugar-free Mango Ice Cream at Home: மாம்பழ சீசன் வந்தாச்சு..! எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம் சுகர் ஃபிரீ மாம்பழ ஐஸ்கிரீம்..!!

Nandhinipriya Ganeshan June 13, 2022 & 11:30 [IST]
How to Make Sugar-free Mango Ice Cream at Home: மாம்பழ சீசன் வந்தாச்சு..! எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம் சுகர் ஃபிரீ மாம்பழ ஐஸ்கிரீம்..!!Representative Image.

How to Make Sugar-free Mango Ice Cream at Home: நம்மில் பலர் இப்போது நீரிழிவு நோயால் அவதிபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சுகர் ஃபிரீ உணவுகளைத்தான் சாப்பிடுகின்றனர். ஆனால், நம்மில் பலருக்கு சுகர் ஃபிரீ  உணவுகளை எப்படி வீட்டில் செய்வது என்று தெரிவதில்லை. அவர்களுக்கும் ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா? சுகர் ஃபிரீ மாம்பழ ஐஸ்கிரீம் வீட்டில் (mango ice cream at home in tamil) எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

நன்றாக பழுத்த மாம்பழம் - 7

பிரஷ் க்ரீம் - 175 கிராம்

வெண்ணிலா எசன்ஸ் - சில துளிகள்

தேன் - 4 ஸ்பூன்

குங்குமப் பூ - சிறிதளவு

காய்ச்சின பால் - 1 டீஸ்பூன்

பாதாம், பிஸ்தா, ட்ரை ஃபுரூட்ஸ்


வந்தாச்சு மாம்பழ சீசன்.. குளுகுளு டேஸ்டியான மாம்பழ குச்சி ஐஸ்/மாம்பழ பாப்ஸிகல்..!


செய்முறை:

மாம்பழங்களை தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை போட்டுவிடுங்கள். பின்னர், நீரை வடிகட்டி மாம்பழங்களின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிடுங்கள்.

இப்போது அந்த மாம்பழ விழுதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். அதற்கு மற்ற வேலைகளை செய்யலாம்.

பிரஷ் கிரீமை எடுத்து, ஹாண்ட் பிளண்டரை பயன்படுத்தி (hand blender) நன்றாக அடித்துக் கொள்ளவும். தற்போது வெண்ணிலா எசன்ஸ் சில துளிகள் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த கிரீமை நுரைவரும் வரை அடித்துக் கொண்டு, அதில் 4 ஸ்பூன் சுத்தமான தேனை சேர்த்து 3 நிமிடங்கள் வரை அடித்துக் கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் பாலில் குங்குமப்பூ சேர்த்து இந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும். ஃபிரிட்ஜில் வைத்த மாம்பழ விழுதை எடுத்து இதோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் 3 லிருந்து 5 நிமிடங்கள் வரை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை ஒருபாத்திரத்தில் அல்லது ஐஸ்கிரீம் செய்யும் பாத்திரம் இருந்தாலும் கூட சரிதான். அதில் நிரப்பி 4 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். 

4 மணி நேரம் கழித்து அதை எடுத்து, அதில் பிஸ்தா, பாதாம், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். 

இதை இரவு முழுவதும் ஃபிரீஷரில் வைக்கவும். அவ்வளவு தான் சுவையான ஜில்லுனு சுகர் ஃபிரீ மாம்பழ ஐஸ்கிரீம் (mango ice cream in tamil) ரெடி.


Sitaphal Ice Cream | சுவையான சீதாப்பழத்தை வைத்து ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க...!


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


மாம்பழ சீசன் வந்தாச்சு...! ரெண்டே நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம் மாம்பழ கேக்..!

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்