சிதம்பரத்திற்குச் சிறப்பு நடராஜார் கோவில். ஆனால் மற்றொரு சிறப்பு என்னவென்றால் மார்கழி மாதத்தில் வரும் இந்த திருவாதிரையில் செய்யும் களி தான் மிகவும் சிறப்பு. எப்பொழுதும் ஒரே மாறி செய்யும் களியை மாற்றி இப்பொழுது புதுவிதமாகவும் மற்றும் எளிதாகவும் எப்படிச் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
✥ பச்சரிசி - 1 கப்
✥ தேங்காய் - 1 கப்
✥ வெல்லம் - 1½ கப்
✥ நெய் - சுவைக்கேற்ப
✥ ஏலக்காய் - இரண்டு
✤முதலில் தேங்காயை நன்றாகத் துருவி ஒரு கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
✤அதன் பின், அடுப்பில் வாணலியை வைத்து, ஒரு கப் அளவிற்குப் பச்சரிசியைச் சேர்த்துக் கொண்டு, பொரி போன்று பொரிந்து வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
✤ஒன்றை கப் வெல்லத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்றாக சிறுசிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
✤வறுத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து நன்றாகப் பொடி போன்று வரும் வரை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
✤ஒரு குக்கரில் நான்கு கப் அளவிற்குத் தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கொதித்த பின் அதில் அரைத்து வைத்த அரிசியைச் சேர்த்து நன்றாகக் கட்டி சேரமால் கிளரவும்.
✤அதன் பின் ஒரு கொதி வந்த பிறகு குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் விடவும். அதன் பின் அடுப்பை நிறுத்தி விடவும். சிறிது நேரம் கழித்துக் குக்கரைத் திறந்து நன்றாக வெந்த பின்னர், திரும்பவும் அடுப்பை ஆன் செய்து குக்கரில் வெந்த அரிசியுடன், வெல்லம் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு வெல்லத்தின் பச்சை வாசம் நீக்கும் வரை நன்றாகக் கிளரவும்.
✤வெல்லம் நன்றாகக் கரைந்த பின்னர், அதனுடன் துருவி வைத்த தேங்காய் சேர்த்து நன்றாகக் கிளரவும்.
✤இத்துடன் வாசத்திற்காக இரண்டு ஏலக்காய் உடைத்துச் சேர்த்துக் கொள்ளவும்.
✤ஒரு சிறிய பாத்திரத்தில், சிறிதளவு நெய் சேர்த்து மற்றும் தேங்காய்த் துருவல் சிறிதளவு சேர்த்து, இதனுடன் நாம் செய்த பொரியரிசி களியைச் சேர்த்து சூடாக பரிமாறலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…