திருவாதிரை என்றால் களி மற்றும் குழம்பு முக்கியமானவை ஆகும்.பொதுவாக, திருவாதிரை குழம்பு என்றால் 7 காய் குழம்பு, 21 காய் குழம்பு என உள்ளது. ஆனால் இந்த மாதிரி 31 வகையான காய்கறிகள் கொண்டு ஒரு அறு சுவையான புளிக் குழம்பு செய்திருப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த 31 வகை புளிக் குழம்பு மிகவும் அறுசுவையுடனும், சுலபமாகவும் எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம்.
மேலும் படிக்க | திருவாதிரை விரதம் மற்றும் தாலி கயிறு மாற்றும் முறை
முட்டைக் கோஸ்
கருணைக் கிழங்கு
முள்ளங்கி
குருமத்தங்காய்
நூல்கோல்
புடலங்காய்
அவரைக்காய்
சின்ன அவரைக்காய்
கத்திரிக்காய்
பீட்ரூட்
வெண்டைக்காய்
பீன்ஸ்
கோவக்காய்
தட்டைக் காய்
பட்டாணி
16.டர்னிப் பூ,
17.கேரட்,
18.வாழைப் பூ,
19.பாகற்காய்,
20.பரங்கிக்காய்,
21.அகத்திக் கீரை,
22.கொத்தவரங்காய்,
23.சேனைக் கிழங்கு,
24.பீர்க்கங்காய்,
25.அகத்திக் கீரை பூ
26.நீர் பூசணி,
27.சேமந்தண்டு,
28.வாழைக்காய்,
29.சௌ சௌ காய்,
30.வாழைத் தண்டு,
31.மொச்சைக் கொட்டை
அனைத்து காய்கறிகளைச் சேர்த்து மொத்தமாக ஒரு கிலோ காய்கறி அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் குழம்புக்கு தேவையான பொருள்கள் பார்க்கலாம்.
சின்ன வெங்காயம்-2 கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய்- 2
தக்காளி- பெரியதாக 3
வெந்தயம் - சிறிதளவு
தேங்காய் - 1 மூடி
சோம்பு - சிறிதளவு
புளி - 100 கிராம்
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
சாம்பார் தூள் - 5 டீஸ்பூன்
மல்லி தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத் தூள் - தேவைக்கேற்ப
கருவேப்பிலை
உப்பு
✤முதலில் மேலே குறிப்பிட்ட அனைத்து காய்கறிகளையும் நன்றாக கழுவிக் சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து வைத்துவிடுங்கள். தேங்காய் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
✤அடுப்பில் ஒரு வாணலி ஒன்றை வைத்து அதில் நல்லெண்ணெய் நான்கு டேபிள்ஸ்பூன் சேர்த்து சூடான பிறகு, அதில் கடுகு, வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤அதனுடன், இரண்டு காய்ந்த மிளகாய், உரித்த வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤காரம் தேவைக்கேற்ப சாம்பார் தூள் ஐந்து டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் மல்லிதூள், சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤.அதன் பின், நறுக்கி வைத்த காய்கறிகளைச் சேர்த்து காய்கள் உடையாமல் கிளறவும். நன்றாகக் கொதித்தப் பிறகு, அதில் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
✤அதில், கரைத்து வைத்த புளிக் கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகப் புளிக் கரைசலைக் கொதிக்க விடவும். வெந்த பின், அதில் அரைத்து வைத்த தேங்காய் ஊற்றிக் கிளறவும். அதை மூன்று நிமிடங்கள் வேக வேண்டும்.
✤அதன் பின் நன்றாகக் கொதித்தபின், அதில் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சூடான சுவையான பல காய் குழம்பு தயாரானது. இதனைச் சூடாகப் பரிமாறலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…