நமது அன்றாட வாழ்வில் பல துரித உணவுப் பழங்கள் மற்றும் அதிக அளவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலைக் கொள்ளமால் இருப்பது தவறு. அதனால் ஏற்படும் விளைவுகளில் எடை அதிகரிப்பு மற்றும் உடலில் கொழுப்பு அதிகரிப்பு, உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதில் தடை மற்றும் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. இத்தகையப் பிரச்சனைகளைச் சரிசெய்ய வீட்டிலேயே ஒரு டீடாக்ஸ் டிரிங்க் இருந்தால் போதும். வேறு என்ன கவலை அதை வீட்டிலேயே தயார் செய்தால் அதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு என்ன இருக்கும். வாங்க வீட்டிலேயே டீடாக்ஸ் டிரிங்க் தயாரிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
இஞ்சி சிறிய துண்டு
பெரிய நெல்லிக்காய்- ஒரு பெரிய துண்டு
எலுமிச்சை - 1
புதினா - சிறிதளவு
தேன் - சுவைக்கேற்ப
முதலில் இஞ்சி,நெல்லிக்காய் துண்டு மற்றும் புதினா ஆகியவற்றை நன்றாகக் கழுவும். அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பின், நறுக்கிய அனைத்தையும் உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.
சிறிது சூடான நீருடன் அரை மூடி அளவு எலுமிச்சை சாறு மற்றும் இடித்து வைத்துள்ள கலவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலக்கிய பின், அதை அப்படியே 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
20 நிமிடங்களுக்குப் பிறகு, கலவை வெதுவெதுப்பான நிலையில், அதனுடன் 2 டீஸ்பூன் தேன் மற்றும் அரை மூடி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துப் பருகவும்.
உடலுக்கு நன்மை தரும் டீடாக்ஸ் டிரிங்க். இதனை வீட்டிலிருந்த படி செய்து பருகுவதன் முலம் உடல் எடைக்குறையும் மற்றும் சருமம்,கேசத்தைப் பாதுகாப்பை மேம்படுத்தும். எனவே, இது போன்ற மிகவும் சுவைமிக்கதாகவும், சத்தாகவும் அமையக்கூடிய நீர் வகைச் சார்ந்தவற்றைப் பருகுவதன் மூலம், நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…