கோபம் என்பது அனைவருக்குள்ளும் இயற்கையாகவே இருக்கும் ஓர் உணர்வுதான். ஆனால், எதற்கு எடுத்தாலும் காரணமே இல்லாமல் அல்லது காரணமே தெரியாமல் கோபப்படுவது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமானது கிடையாது. உதாரணமாக, மன அழுத்தம், தலைவலி, இதய நோய், இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகள் இருக்கும்போது கோபப்பட்டால், உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின்னர் மரணத்தையும் ஏற்படுத்தலாம். கோபத்தை எப்படிக் கையாள்வது... யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
அலுவலக ரீதியாகவோ, பெரியவர்களிடமோ கோபம் வந்தால் அதை நம்மால் வெளிகாட்ட முடியாது. ஆனால், அடக்கியும் வைக்கக் கூடாது. அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஒரு பேப்பரில் நீங்க அவர்களிடம் சொல்ல நினைக்கும் அனைத்து விஷயங்களையும் எழுதுவிடுங்கள். எழுதி முடித்ததும் ரிலாக்ஸாக இருப்பதாக உணர்ந்த பின்னர், அந்த பேப்பரை கிழித்து எறிந்துவிடுங்கள். எழுவதற்கு சலுப்பா, ஒன்னும் பிரச்சனையில்லை மொபைலில் டைப் செய்துவிட்டு, கோபம் அடங்கியதும் அதை கட்டாயம் அழித்துவிட வேண்டும். ஏனென்றால் தெரியாமல் கூட யாருக்கும் அனுப்பிவிட வேண்டாம்.
கோபம் வரும்போது இதயத்துடிப்பு அதிகமாவது, வேகமாக சுவாசிப்பது, நகங்களை கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது, பற்களை கடிப்பது இவற்றில் ஏதாவது நீங்கள் செய்தீர்கள் என்றால், உடனே உங்க மனதை சாந்தப்படுத்துங்கள். உங்களுக்கு நீங்களே 'அமைதியா இரு... பொறுமையா இரு... சாந்தமா இரு' என தொடர்ந்து சொல்லுங்கள். இது அவ்வப்போது ஏற்படும் கோபத்தை எளிதில் போக்கிவிடும்.
மூக்குக்கு மேல கோபம் வந்தால், சுவாசிக்கும் முறையில் கவனத்தை செலுத்தலாம். 1 முதல் 6 வரை மனதில் எண்ணிக்கொண்டே மூச்சை மெதுவாக உள்ளித்து, அதேபோல 1 முதல் 7 வரை எண்ணிக்கொண்டே அந்த மூச்சை அடக்கி வைத்து, கடைசியாக மீண்டும் 1 முதல் 8 வரை எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி 10 முறை முயற்சித்து பாருங்கள். கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும் கூட குறைந்துவிடும். அதேபோல், அதிகமாக கோபப்படுபவர்கள், வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம். இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
சில நேரங்களில் தலைக்குமேல கோபம் வந்தால், வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழ் போட்டுக்கொண்டு தலையணையிடன் கோபத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், அதுவும் 2 நிமிஷத்துக்கு மேல் இருக்க கூடாது. இதுபோன்ற நேரத்தில் ஏதாவது கவிதையை எழுதவும் முயற்சிக்கலாம் அல்லது வீட்டில் செடி இருந்தால் அதை பராமரிக்க செய்யலாம்.
மனதுக்கு பிடித்தவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசலாம், நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்க்கலாம். இதனால் மனநிலை உடனடியாக மாறி அமைதி பெறும். ஃபோன் கையில் இல்லாத நேரத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு 1 லிருந்து 10 வரை எண்ணுங்கள். பின்னர், அதையே மீண்டும் 10 லிருந்து 1 வரை எதிர்மறையாக எண்ணுங்கள். இதுவும் மைட்டுக்கு ரிலாக்ஸை கொடுக்கும்.
அதுவே, காரணமே இல்லாமல் கோபம் வருகிறது, கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று நினைப்பவர்கள், உடனே மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. எப்போதும் நல்ல அமைதியான மனநிலையில் இருக்கவேண்டும் என்று எண்ணினால் ஒரு நாளைக்கு 10 நிமிடங்களாவது தியானம் செய்ய முயற்சி பண்ணுங்க. நிச்சயம் மனம் அமைதி பெறும். உள்ளத்தில் தெளிவு பிறக்கும்.
கோபம் வரும்போது சிகரெட் பிடிப்பது, டீ குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். அதற்கு பதிலாக ஒரு அமைதியான இடத்திற்கு சென்று 10 நிமிடங்களாவது கண்களை மூடி உட்கார்ந்துவிட்டு வாருங்கள். அதேபோல் உங்களுடைய உணவின் மூலமே உங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான கோபத்தைக் குறைக்க முடியும். எனவே கோபம் வராமல் இருக்க வாழைப்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, பால், பாதாம் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…