How to Reduce Period Pain in Tamil: அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் இந்த மாதிரியான நேரத்தில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படுவது பொதுவான ஒரு விஷயம் தான், அதை தவிர்க்க முடியாது. இருப்பினும், ஒவ்வொரு பெண்களுக்கு ஏற்றவாறு வலியின் தீவிரம் மாறுபடலாம். சிலருக்கு லேசான வலி, மற்றவர்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்படலாம்.
நீங்க ஒவ்வொரு மாதமும் தாங்க முடியாத மாதவிடாய் பிடிப்புகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், விரையான தீர்வுகளுக்கு நீங்க பல்வேறு விதமான வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அதை முயற்சித்து பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் காலத்தில் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும், அதற்கு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். ஏனெனில், இது வலியை சமாளிக்க உதவும். ஆனால், அது மட்டும் போதாது, வலியற்ற மாதவிடாயை அனுபவிக்க ஐந்து வீட்டு வைத்தியங்களை பற்றி பார்க்கலாம்.
வீட்டு வைத்தியங்கள் | Home remedies to relieve menstrual cramps
யோகா
மாதவிடாய் பிடிப்புகளை சமாளிக்க யோகா உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், எல்லா வகையான யோகா போஸ்களையும் நீங்க செய்ய கூடாது. மாதவிடாய் காலங்களில் செய்வதற்கென்ற சில ஆசனங்கள் இருக்கின்றன. கௌமுகாசனம், புஜங்காசனம் மற்றும் ஜானு சிர்சாசனம் போன்ற ஆசனங்களை செய்யலாம். இது வலியை போக்க உதவும்.
உலர் திராட்சை & கேசர்
மாதவிடாய் வலியைப் போக்க இது மிகவும் பயனுள்ள இயற்கை வீட்டு வைத்தியம் ஆகும். அதற்கு, ஒருநாள் முன்னாடியே 3-4 திராட்சைகளை ஊறவைத்து, காலை நேரத்தில் சிறிதளவு கேசருடன் (குங்குமப்பூ) சேர்த்து சாப்பிட வேண்டும். இது பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் பரிந்துரைத்த வீட்டு வைத்தியம்.
வாழைப்பழம்
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. ஆனால், இந்த வாழைப்பழம் மாதவிடாய் வலியை சமாளிக்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளன, இது மாதவிடாய் பிடிப்புகளை சமாளிக்க எளிமையான யோசனையாகும்.
வெந்நீர்
வெப்பத்தின் பயன்பாடு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான தண்ணீரில் காட்டன் துண்டை நனைத்து வயிற்றின் மீது வைத்தால் வலி குறையும். அல்லது வெந்நீர் குளியல் கூட (how to relieve period cramps at home) உதவும்.
டார்க் சாக்லேட்
சிறிது டார்க் சாக்லேட் சாப்பிடுவது மாதவிடாய் பிடிப்புகளை நீக்குவதாக கூறப்படுகிறது. ஏனெனில், டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது, இது தசைகளை தளர்த்தவும் வலியை குறைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், நீங்க 3-4 பாதாம் அல்லது பூசணி விதைகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த பிற உணவுப் பொருட்களையும் (how to prevent menstrual cramps naturally) உட்கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…