How to Remove Dark Neck Naturally: எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான சருமப் பிரச்சனைகளில் ஒன்று, கழுத்துக் கருமை. குறிப்பாக இந்த கோடைக்காலத்தில் இன்னும் அதிகரித்துவிடும். இதற்காக பல ட்ரீட்மென்ட்ஸ் இருக்கின்றன. ஆனால், செலவில்லாமல் வீட்டிலேயே இயற்கையான முறையில் ஈஸியாக கழுத்து கருமையை நீக்கிவிடலாம்.
இந்த கருமை சில பெண்களுக்கு ஒவ்வாத ஆபரணங்களை அணிவதன் மூலமும், விலை மலிவான தரமற்ற க்ரீம்களை பூசுவதாலும் ஏற்படுகிறது. இப்போது வீட்டில் இருக்கும் பொருட்களை (home remedies for dark neck) கொண்டு கழுத்து கருமையை எப்படி போக்குவது என்று பார்க்கலாம்.
பழத்தோல்:
மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களின் தோலை காய வைக்காமல், அதை அப்படியே மிக்ஸியில் அரைத்து கழுத்தில் அப்ளை செய்து சில வினாடிகள் வரை மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவவும். இது கருமையை நீக்கி அழகான முகத்துக்கு ஏற்றப்படி கழுத்துப் பகுதியை (how to get rid of dark neck fast at home) மாற்றும். ஒருவேளை எல்லாப் பழங்களும் இல்லாவிட்டால், அதில் ஏதோ ஒரு பழத்தை அரைத்தும் பயம்படுத்தலாம்.
பாசிப்பயறு:
பாசிப்பருப்பு மாவுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு, பால் சேர்த்து நன்றாக குழைத்து கழுத்து பகுதியில் அப்ளைச் செய்து 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் நீரில் கழுவி வந்தால் கருமை நிறம் மெல்ல மறைய (how to get rid of dark neck naturally) தொடங்கும்.
கற்றாழை:
கற்றாழை ஜெல்லை எடுத்து கழுத்துப் பகுதியில் அப்ளைச் செய்து, நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த தண்ணீராய் கழுவவும். அல்லது தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கற்றாழையை கழுத்தில் பூசிக் கொண்டு, மறுநாள் காலையில் குளிக்கும்போது தேய்த்துக் குளித்தாலே போதும் நாளடைவில் கருமை காணாமல் போய்விடும். கற்றாழை சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வு, எனவே முகத்திற்கும் இதே முறையை பின்பற்றலாம்.
பால்:
ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பாலை எடுத்து, பஞ்சால் அதைத் தொட்டு, கழுத்தைச் சுற்றி நன்கு துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் இறந்த செல்களும், அழுக்கும் வெளியேறும். பின்னர் அதை ஒரு அரை மணிநேரத்திற்கு அப்படியே வைத்திருந்து கழுவவும். கருமை நீங்கும் வரை இதை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வர, கருமை படிப்படியாகக் குறைந்து மறையும்.
தயிர் பேக்:
தயிரில் கழுத்து கருமையை போக்கும் அற்புத தன்மை இருக்கிறது. சிறிதளவு எலுமிச்சை சாறு, தயிர், கடலை மாவும் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அதை பேஸ்ட்டாக்கி கழுத்தில் கருமை இருக்கும் இடத்தில் (home remedies for dark neck) அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
உங்க முகம் கருப்ப இருக்கா? 5 நிமிடத்தில் வெள்ளையாக்க கற்பூரவல்லி இலையை வைத்து ஃபேஸ் பேக்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…