How to Remove Skin Dryness Naturally: நம்மில் பலருக்கு முகம், கை, கால்களில் வறண்ட சருமம் காணப்படும். அதற்கு காரணம் நீர்ச்சத்து உடலில் கம்மியாக இருப்பது தான். எனவே, எல்லோரும் நாள் ஒன்று 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயம். வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் போதாது, நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் பழங்கள், காய்கறிகளையும் உடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், உடலுக்கு ஈரப்பதம் என்பது கட்டாயம், எனவே தினமும் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டும். சரி, இப்போது இயற்கை முறையில் சருமத்தில் இருக்கும் வறட்சியை நீக்குவதற்கான சில குறிப்புகளை (home remedies for dry skin in summer) பார்க்கலாம்.
டிப்ஸ் 1
ஒரு கிண்ணத்தில் நன்றாக பழுத்த வாழைப்பழுத்தை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள். பிறகு, அதை முகத்தை சுற்றில் ஃபேஸ் பேக் போட்டு, சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவிடுங்கள். சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்கி, சரும பொலிவுடன் இருக்கும். மேலும், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து முகப்பரு வராமலும், சரும வறண்டு போகாமலும் பாதுகாக்கும்.
அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா? இந்த ஒரு பொருளை விளக்கெண்ணையுடன் சேர்த்து தடவினாலே போதும்...
டிப்ஸ் 2
நன்றாக பழுத்த வாழைப்பழத்தை எடுத்து பிசைந்து, அதில் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் சேர்த்து முகத்தில் தடவுங்கள். இதை 15 நிமிடங்கள் அப்படியே விட்டு கழுவி விடவும். இதை வாரத்திற்கு இருமுறை செய்துவர முகத்தில் இருக்கும் கருமை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும். மிருதுவான சருமத்திற்கு (How to remove dryness from face naturally) இதை ட்ரை பண்ணி பாருங்க.
டிப்ஸ் 3
வாழைப்பழம் ஒன்றை நன்றாக பிசைந்து, அதில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவிடுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் தோலின் கருமை, கண்ணை சுற்றி உள்ள கருவளையம், வாயை சுற்றி உள்ள கருவளையம் எல்லாம் நீங்கும். இந்த வீட்டு வைத்தியங்களை நீங்க கை, கால்களுக்கும் பயன்படுத்தலாம். கை, காளில் இருக்கும் சுருக்கம் நீங்கும். மிருதுவான சருமம் கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
சம்மர்ல முகத்துல ஆயில் அதிகமா வடியுதா...? இதோ சிம்பிளான ஆயுர்வேதிக் ஃபேஸ் பேக்ஸ்....!!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…