Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

How To Stop Snoring In Tamil: குறட்டை தொல்லையில் இருந்து விடுபட இதோ சில டிப்ஸ்... இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க

Nandhinipriya Ganeshan June 30, 2022 & 10:45 [IST]
How To Stop Snoring In Tamil: குறட்டை தொல்லையில் இருந்து விடுபட இதோ சில டிப்ஸ்... இத மட்டும் ஃபாலோ பண்ணுங்கRepresentative Image.

How To Stop Snoring In Tamil: தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. குறைட்டை விட்டு தூங்கும் மனிதர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று நினைகிறோம். ஆனால், அது ஆரோக்கியாமான தூக்கம் கிடையாது; அது ஒரு மயக்க நிலை. இந்த குறட்டையால் அவர்களுடைய தூக்கமும் போயி, அருகில் இருப்பவர்களின் தூக்கத்தையும் தொலைந்து போய்விடுகிறது. வெளிநாடுகளில் குறட்டைவிடும் கணவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு விபரீதப் பிரச்சனையாக இருக்கிறது இந்த குறட்டை. பொதுவாக, பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் குறட்டைவிடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிக்கலாமே: ஆஃபிஸில் வேலை நேரத்தில் தூங்கி வழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?? இதோ சிம்பிலான டிப்ஸ்....

குறட்டை ஆபத்தா?

இந்த விஷேச நாட்களில் உறவினர்கள் கூடும் வேளையில், குறட்டைவிடுபவர்களை கண்டாலே தெரித்து ஓடுவார்கள்.  அதுமட்டுமல்லாமல், குறட்டைவிடுபவர்களை எல்லாரும் கிண்டலும் கேலியும் செய்வார்கள். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் வேதனை அவர்களுக்கு தான் தெரியும்.

இதையும் படிக்கலாமே: சரும அழகை பராமரிப்பதில் ஆண்கள் செய்யும் தவறுகள்...

தினமும் தலைவலி, சோர்வு, வேலையில் நாட்டமின்மை, ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்சனையை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால், உயர் இரத்த அழுத்தம், இருதயநோய், பக்கவாதம், சர்க்கரைநோய் போன்றவற்றிற்கு காரணியாக அமையலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

குறட்டை ஏன் ஏற்படுகிறது?

சுவாசப்பிரச்சனை, உடல்பருமன், மரபுவழி, தைராய்டு பிரச்சனை, புகைப்பிடிப்பது, தூக்க மாத்திரை, மனஅழுத்தம், பணிசுமை, உடலை வருத்திக் கொண்டு வேலை செய்தல், மரு அருந்துதல் போன்றவை குறட்டை ஏற்படுவதற்கான காரணங்களாகும். 

இதையும் படிக்கலாமே: இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க...

குறட்டை தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ்:

❖ இந்த குறட்டைக்கு முதல் காரணம் உடல் பருமன் தான். குண்டாக இருப்பவர்களின் தொண்டை பகுதியில் கொழுப்பு திசு, நலிவான தசை இருப்பதால் குறட்டை ஏற்படும். எனவே, உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

❖ தினமும் இரவில் தூங்கும் போது நேராக படுக்கும் போது குறட்டை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. எனவே, இடது பக்கவாட்டில் (How To Avoid Snoring In Tamil) படுங்கள்.

❖ மது அருந்துவது தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டையை ஏற்படுத்தும். எனவே, புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்.

❖ உடலில் நீர் பற்றாக்குறையால் சளி ஏற்பட்டு குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆண்கள் நாளொன்றுக்கு 3.7 லிட்டரும், பெண்கள் 2.7 லிட்டரும் தண்ணீர் பருக வேண்டும். 

❖ இரவில் தூக்கம் வரவில்லை என்று தூக்கம் மாத்திரை எடுத்துக் கொண்டால் அதிமான தூக்கம் வரும். இதனால் குறட்டை ஏற்படும். எனவே, தூக்க மாத்திரைகளை தவிர்க்கவும். 

❖ மெலடோனின் அதிகம் எடுத்துக் கொண்டால் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே, வாழைப்பழம், கமலாப்பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் (how to stop snoring naturally in tamil) கொள்ளுங்கள்.

❖ பால், பால் சார்ந்த பொருட்கள் தொண்டையில் வீக்கம் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, தூங்கும் முன் பால் அருந்துவது தவிர்க்க வேண்டும். 

❖ தினமும் இரண்டு முறையாவது, இஞ்சி தேநீர், தேன் அருந்த முயற்சி பண்ணுங்க. இதனால் குறட்டை தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம். 

இதையும் படிக்கலாமே: பிறந்தநாள் பார்ட்டிக்கு இப்படி வீட்டை அலங்கரித்துப் பாருங்க…பார்ட்டிக்கு வரவங்க பிரமித்து நிப்பாங்க.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்