Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

How to Strengthen Bones: வயதானாலும் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க இதை செய்யுங்கள்! எப்பவுமே நமக்கு ஸ்ட்ரென்த் தான்!

Priyanka Hochumin June 10, 2022 & 19:00 [IST]
How to Strengthen Bones: வயதானாலும் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க இதை செய்யுங்கள்! எப்பவுமே நமக்கு ஸ்ட்ரென்த் தான்!Representative Image.

How to Strengthen Bones: 30 வயதிற்கு மேல் எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய சிம்பிள் டிப்ஸ் இதோ உங்களுக்காக.

பொதுவாக இளம் வயதில் அவ்ளோ சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளா விட்டாலும், நம்முடைய உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அது அந்த காலத்து உணவு முறைகளுக்கு ஏற்றது. இந்த காலத்தில் என்ன தான் சாப்பிட்டாலும் நம்முடைய உடல் பலவீனமாக தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பொழுது 30 வயது ஆன பிறகு தானாக ஏற்படும் சத்து குறைபாட்டால் ஏற்படும் இன்னல்கள் எக்கச்சக்கம். அதில் மிகவும் முக்கியமான ஒன்று எலும்பு தேய்மானம். இயற்கையாகவே 30 வயதிற்கு பிறகு உடலில் இருக்கும் எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். எனவே, நமக்கு கை, கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி போன்றவை ஏற்படும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பிரச்சனை பெருசாகி நாம் மற்றவரின் தயவை எதிர்பார்த்து வாழும் சூழ்நிலை உருவாகிவிடும். இதில் இருந்து உங்களை காத்துக்கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றினால் போதும் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம்.

உடற்பயிற்சி

நம்முடைய அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தாலே போதும், பாதி நோய்கள் நீங்கிவிடும். நம்முள் பலபேர் கார்டியாக் பயிற்சிகளை தான் மேற்கொள்கின்றனர். கார்டியாக் என்றால் ஸ்விம்மிங், வாக்கிங், சைக்ளிங், ரன்னிங் போன்றவை தான். இவை நம்மளை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது, மேலும் தெளிவாக இருக்கவும் வழிவகுக்கிறது. ஆனால் நம்முடைய எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்த இவை போதாது. இதற்கு வெயிட் ட்ரெயினிங் மேற்கொள்வதே சிறந்தது. இதை நீங்களா செய்வதை விட ஜிம் சென்று பயிற்சியாளரிடம் நன்கு கற்றுக்கொண்டு, பிறகு நம்முடைய வீட்டில் பயிற்சி செய்யலாம்.

வைட்டமின் டி ரொம்ப முக்கியம்

நம்முடைய எலும்புகள் வலுவடைய அதற்கு தேவையான வைட்டமின் டி தினமும் நமக்குத் தேவை. இப்பொழுதெல்லா உடலுக்கு வைட்டமின் டி தேவைப்பட்டால் டேப்லெட் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் நமக்கு இயற்கையாக சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி நமக்கு கூடுதல் நன்மை தரும். உங்களுக்கு முகத்தில் சரும பிரச்சனை ஏற்படலாம் என்ற பயம் இருந்தால், முகத்தை துணியால் கட்டிக்கொண்டு உங்களுடையாய் பால்கனியில் நடக்கலாம் அல்லது உட்காரலாம். சூரிய ஒளி உங்களுடைய கை, கால், மற்ற பகுதிகளுக்கு கிடைத்தால் போதும்.

உணவில் கவனம் தேவை

உணவில் புரதச்சத்து (Protein) அதிகம் இருப்பவற்றை தினமும் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக காளான், பால், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும் தயிர், மோர், பால் பொருட்களான பன்னீர், சீஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது மிகவும் சிறப்பு. பருப்பு வகையில் ராஜ்மா, சன்னா, மற்ற பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். மாலையில் ஸ்னாக்ஸ் சாப்பிட கடலை உருண்டை, எள்ளு உருண்டை போன்ற சத்தான சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்தில் மூன்று முறையாவது கீரை வகைகளை எடுத்துக்கவும். அதே போல் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, முருங்கையிலை போடி ஆகிய உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களை சேர்த்துக்கவும்.

 

விதைகளில் பூசணி விதை, சியா விதைகள் மற்றும் கம்பு, கேழ்வரகு, சோளம், சிறுதானியங்கள் ஆகியவற்றை சேர்த்துக்கலாம். அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கலாம். 

நான்-வெஜ் உணவுகளில்

மெக்னீசியம் மற்றும் ஜிங்க் அதிகம் இருக்கும் நட்ஸ் வகைகளை, கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.  

How to Strengthen Bones, How to Strengthen Bones after 30, How to Strengthen Bones in old age, How to Strengthen Bones and muscles, How to Strengthen Bones and nerves, How to Strengthen Bones and joints naturally, How to Strengthen Bones by food, 

உடனுக்குடன் செய்திகளை (Health Tips) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்