Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

குளிர்காலத்தில் பட்டுப்போன்ற சருமத்தை பெற இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க...

Nandhinipriya Ganeshan November 10, 2022 & 19:00 [IST]
குளிர்காலத்தில் பட்டுப்போன்ற சருமத்தை பெற இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க...Representative Image.

குளிர்காலம் வந்துவிட்டாலே நமது சருமம் மிகவும் வறண்டு அங்காங்கே அரிப்பு, வெடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இதற்கு காரணம் குளிர்காலத்தில் நம்மில் பலருக்கும் தண்ணீர் குடிக்கவே தோன்றாது. அதிலும் சிலர் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இதன் விளைவு உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்படும். எனவே, கோடைக்காலத்தில் காட்டிலும் குளிர்காலத்தில் தான் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

சினிமா நடிகைகள் மாதிரி ஸ்மூத்தான கைகளைப் பெறுவது இப்படித்தானா?

குளிர்காலத்தில் பட்டுப்போன்ற சருமத்தை பெற இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க...Representative Image

அதுமட்டுமல்லாமல், குளிர்காலத்தில் சரும பராமரிப்பிலும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக க்ரீம்களை பயன்படுத்த வேண்டியது ஒரு பக்கம்  இருந்தாலும், இயற்கை முறையிலும் சருமத்தில் இருக்கும் வறட்சியை போக்கி மிருதுவான சருமத்தை பெற முடியும். அதற்கு முதலில் நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதை துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அத்துடன் 1 ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் 1 ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். 

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....

குளிர்காலத்தில் பட்டுப்போன்ற சருமத்தை பெற இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க...Representative Image

இந்த பேஸ்ட்டை முகம், கை, கால், கழுத்து என எல்லாப் பகுதியிலும் தடவி அரை மணி நேரம் நன்றாக ஊறவிட்டு சாதாரணமான தண்ணீரில் கழுவிடுங்கள். இதை தொடர்ந்து வாரம் 2 முறை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். உங்க சருமம் குளிர்காலத்திலும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். சில பெண்களுக்கு கை மற்றும் கால்கள் கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இதை தொடர்ந்து பின்பற்றினால் நிரந்தரமாக மென்மையான சருமத்தை பெறலாம். 

குறிப்பு: முகத்தில் முகப்பரு இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவர்த்துவிட்டு, வெறும் ஓட்ஸ் பவுடர் மற்றும் தேனை மட்டும் கலந்து பயன்படுத்துங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்