Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையான சருமத்தை பெற இந்த ஈஸியான டிப்ஸ பின்பற்றுங்க.. 

Nandhinipriya Ganeshan October 27, 2022 & 13:17 [IST]
குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையான சருமத்தை பெற இந்த ஈஸியான டிப்ஸ பின்பற்றுங்க.. Representative Image.

பொலிவான மற்றும் மென்மையான சருமத்தை தான் அனைவரும் பெற விரும்புவோம். ஆனால், பருவநிலை மாற்றம் அதை பெற விடுவதுக்கிடையாது. குறிப்பாக குளிர்காலம் வந்துவிட்டாலே சருமம் மிகவும் வறண்டு போய் அங்காங்கே வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. குளிர்காலத்தில் வறண்ட என்பது சாதாரணம் என்றாலும், கவனிக்காமல் விட்டுவிட்டால் சருமத்தில் இருக்கும் மொழுப்பு அமிலங்கள் குறைந்து, பல பாதிப்புகளை ஏற்படுத்தும். 

பிரசவத்துக்குப்பின் ஏற்படும் தழும்புகளை முன்கூட்டியே தவிர்ப்பது எப்படி?

ஆகவே, குளிர்காலத்தில் தாகம் எடுக்காவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய காய்கறிகள், நிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவைனைத்தும் சருமத்தில் ஈரப்பதத்தை இயற்கையாக தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், குறைந்த ஒரு நாளில் 3 முறையாவது மாய்ஸ்ரைசர் பயன்படுத்துங்கள். இப்போது சரும வறட்சியை போக்கும் எளிய இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம். 

முகம் கலரா இருக்கணுமா? வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க...

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையான சருமத்தை பெற இந்த ஈஸியான டிப்ஸ பின்பற்றுங்க.. Representative Image

தயிர் 

தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் ஆகியவற்றை நன்றாக குழைத்து, முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவிடுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வறட்சியை போக்கி சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும். இந்த குளிர்காலத்திலும் சருமம் பொலிவாகவும் மென்மையாகவும் இருக்கும். 

மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்.. அவற்றின் நன்மைகள் என்ன?

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையான சருமத்தை பெற இந்த ஈஸியான டிப்ஸ பின்பற்றுங்க.. Representative Image

பால்

ஒரு கப்பில் தேவையான அளவு பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு காட்டன் துணியில் நனைத்து சருமத்தில் மென்மையாக தடவி, சிறிது நேரம் விட்டு கழுவினால் சருமத்தில் இருக்கும் வறட்சியெல்லாம் காணாமல் போய்விடும். அல்லது பாலை இரவில் தூங்க செல்வதற்கு முன்புக்கூட தடவி கொண்டு, மறுநாள் காலை கழுவினாலும் சருமம் மென்மையாக இருப்பதோடு, மினுமினுப்பாகவும் இருக்கும். 

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு மற்றும் வறண்டு போவதைத் தடுப்பதற்கான டிப்ஸ்....

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி மென்மையான சருமத்தை பெற இந்த ஈஸியான டிப்ஸ பின்பற்றுங்க.. Representative Image

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் இவற்றில் ஏதோ ஒன்றை குளிக்க செல்வதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 1 மணி நேரம் ஊறவிடுங்கள். அதன்பின், வெதுவெதுபான தண்ணீரில் குளித்துவிடுங்கள். இதை வாரத்தில் 3-4 முறை செய்து பாருங்கள், குளிர்காலத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் சருமம் மென்மையாக பிரகாசமாக இருக்கும்.

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முடி உதிர்வை தடுப்பது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்