Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் ரகசியம் இதுதானா?

Nandhinipriya Ganeshan July 21, 2022 & 20:00 [IST]
கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் ரகசியம் இதுதானா? Representative Image.

How to Use Brahmi Leaves for Hair Growth in Tamil: நீளமான அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை தரும் நீர் பிரம்மி. கேரளத்து பெண்களின் அதிக முடி வளர்ச்சிக்கும் இதுவும் ஒரு காரணம். அதென்ன நீர் பிரம்மி? நம் ஊரில் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் வல்லாரை கீரையை தான் பிரம்மி என்று சொல்வார்கள். இது பார்த்தற்கு வட்ட வடிவில் அகலமான இலைகளை கொண்டிருக்கும். ஆனால், வடநாடுகளில் சொல்லப்படக்கூடிய பிரம்மி என்பது சின்ன சின்ன இலைகளைக் கொண்டிருக்கும். இதை தான் நீர் பிரம்மி இலை என்று சொல்வார்கள். இந்த செடிகள் நீர் வரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் அதிகமாக காணப்படும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

உங்களுடைய முடிக்கு தேவையான அளவு பிரம்மி இலைகளை பறித்துக்கொள்ளுங்கள். தண்டுகளையும் பயன்படுத்தலாம். இப்போது பறித்து வைத்துள்ள இலை, தண்டுகளை தண்ணீரில் போட்டு ஒருமுறை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.

பின்னர், அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்டன் துணியில் போட்டு அதில் வரும் சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த சாற்றை ஸ்கேல்ப் மற்றும் முடிகளில் தடவி நன்றாக செய்து அப்படியே 15 நிமிடங்கள் வைத்திருந்து தலைக்கு குளித்து விடுங்கள். வாரத்தில் ஒரு முறை இப்படி செய்து வருவதன் மூலம் முடி உதிர்வு நின்று, அடர்த்தியான நீளமான கருமையான கூந்தல் வளரத் தொடங்கும்.

கேரளாவில் உள்ள பெண்கள் இந்த இலையை தான் தலைக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் அவர்களுடைய கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கிறது. இந்த குறிப்பு உண்மையில் உங்களுடைய தலை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். இதை தொடர்ந்து செய்துவர நீங்களே மாற்றத்தை உணருவீர்கள்.

Tags:

Benefits of brahmi leaves in tamil | How to use brahmi leaves for hair | How to use fresh Brahmi leaves for hair | Benefits of brahmi leaves for hair | How to use brahmi leaves for hair growth in tamil | where can i get brahmi leaves | Where to get brahmi brahmi leaves


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்