Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பெப்பர் மிண்ட் ஆயில்.. 

Nandhinipriya Ganeshan October 11, 2022 & 18:30 [IST]
முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பெப்பர் மிண்ட் ஆயில்.. Representative Image.

ஆரோக்கியமான மற்றும் நீளமான முடி தான் எல்லாருடைய கனவும். ஆனால், அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பது கிடையாது. எல்லோரும் நல்ல முடி வளர்ச்சியுடன் தான் பிறக்கிறோம். இருப்பினும் இந்த காலத்தில் நம்மில் பலரும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிபட்டு கொண்டு தான் இருக்கிறோம்.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை தான். என்ன தான் ஷாம்புகளை வாங்கி முடி உதிராமல் தடுத்தாலும், அதுவும் ஒரு இராசாயன பொருள் தானே. அப்படி கூடுதல் கவனம் செலுத்தியும் பலருக்கு முடி இன்னமும் உதிர்ந்து கொண்டு தான் இருக்கு. அப்படி, இந்த முடி கொட்டுற பிரச்சனையில இருந்து எப்படி தான் தப்பிக்கிறது என்று பலரும் யோசித்து கொண்டுதான் இருப்பீர்கள்.

தீபாவளி ஸ்பெஷல்! ஈசியான பர்ஃபி ரெசிபீஸ்..

கவலையை விட்டு தள்ளுங்க... முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த ஷாம்புகளுடன் பெப்பர் மின்ட் ஆயிலை சேர்த்து பயன்படுத்தி பாருங்க. முடி உதிர்வு தானாக நின்றுவிடும். இது முடிக்கு ஊட்டச்சத்துக்களை மட்டுமே கொடுக்கிறது. அதோடு பல முடி சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கிறது. வாங்க.. இந்த தீரா பிரச்சனையில் இருந்து எப்படி விடுபடுவது என்று பார்க்கலாம்.

கண்களை சுற்றியிருக்கும் கருவளையம் மறைய எளிமையான டிப்ஸ்...

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பெப்பர் மிண்ட் ஆயில்.. Representative Image

பெப்பர் மின்ட் ஆயில் மின்ட் மாஸ்க்..

¼ கப் சோர் க்ரீம் (புளிப்பு க்ரீம்), 1 டேபிள்ஸ்பூன் தேன், 4 - 6 துளிகள் பெப்பர்மின்ட் ஆயில் எடுத்து நன்கு மிக்ஸ் செய்து ஹேர் மாஸ்க் தயார் செய்து கொள்ளுங்கள். பின் தலை முழுவதும் இந்த ஹேர்மாஸ்க்-ஐ தடவி 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின் உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரால் வாஷ் செய்துவிடுங்கள்.

கருமையான தலைமுடி, தெளிவான கண் பார்வை, சுருக்கமில்லாத சருமம் வேண்டுமா?

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பெப்பர் மிண்ட் ஆயில்.. Representative Image

பாதாம் ஆயிலுடன்.. 

ஒரு சிறிய கடாயில்2 டேபிள் ஸ்பூன் ஸ்வீட் பாதம் ஆயிலை எடுத்து கொண்டு, அதில் 3 துளிகள் பெப்பர்மின்ட் ஆயிலை நன்கு கலக்கி லேசாக கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், இந்த ஆயில் மிக்ஸிங்கை உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை கொண்டு தலைக்கு குளிக்கலாம்.

இத மட்டும் பண்ணுங்க ஏழு நாள் ஆனாலும் பூ வாடவே வாடாது...

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பெப்பர் மிண்ட் ஆயில்.. Representative Image

தேங்காய் எண்ணெயுடன்..

1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் பெப்பர்மின்ட் ஆயிலை சேர்த்து உச்சந்தலையில் ஊற்றி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு தலைக்கு குளிக்கவும். 

பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்..

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பெப்பர் மிண்ட் ஆயில்.. Representative Image

ஷாம்பு அல்லது கண்டிஷ்னருடன்..

நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டிஷ்னருடனும் பெப்பர்மின்ட் ஆயிலை சேர்த்து பயன்படுத்துவது ஆரோக்கியமான கூந்தலை பெற மற்றொரு சிறந்த வழியாகும். ஷாம்பு அல்லது கண்டிஷ்னருடன் சுமார் 6 துளிகள் வரை பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு மேல் சேர்க்க வேண்டாம்.

மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி: அவல் இருக்கா? சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பெப்பர் மிண்ட் ஆயில்.. Representative Image

ரோஸ்மேரி ஆயிலுடன்.. 

2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2 துளிகள் பெப்பர்மின்ட் ஆயில் மற்றும் ஒரேஒரு துளி ரோஸ்மேரி ஆயில் சேர்த்து கொள்ளுங்கள். இந்த 3 ஆயில்களின் கலவையை லேசாக சுட வைத்து தலைக்கு தடவி சுமார் 15 மிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு தலைமுடியை வழக்கம் போல அலசி கொள்ளுங்கள்.

Also Read:

தலைக்கு குளிக்கும்போது இந்த ஐடியாவை மட்டும் முயற்சித்து பாருங்க.. ஒரு முடி கூட கொட்டாது...

கல்கண்டு சாதம், சோளச் சுண்டல், அவல் லட்டு | புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்