Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சூப்பரான, சுவையான இட்லி மிளகாய் பொடி..! இப்படி செஞ்சி பாருங்க… | How to Make Idli Podi at Home in Tamil

Gowthami Subramani Updated:
சூப்பரான, சுவையான இட்லி மிளகாய் பொடி..! இப்படி செஞ்சி பாருங்க… | How to Make Idli Podi at Home in TamilRepresentative Image.

இட்லிக்கும், தோசைக்கும் எப்போதும் சட்னி, சாம்பார் என ஒன்றையே சாப்பிடுவதை விட்டு, இட்லி பொடி தொட்டு சாப்பிடுவர். இந்த சுவையான இட்லி பொடியை நாம் வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்யலாம். அதே நேரம், வீட்டிலேயே தயார் செய்யப்படும் இட்லி பொடியை 3 முதல் 4 மாதங்கள் வரையிலுமே கெடாமல் பார்த்துக் கொள்ளலாம். இட்லி, தோசையுடன் பொடி வைத்து சாப்பிடுவது வேலையும் குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். சரி, இதில் வீட்டிலேயே இட்லி மிளகாய் பொடி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

சூப்பரான, சுவையான இட்லி மிளகாய் பொடி..! இப்படி செஞ்சி பாருங்க… | How to Make Idli Podi at Home in TamilRepresentative Image

தேவையான பொருள்கள்

உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு

கறிவேப்பிலை – 1 கொத்து

மிளகாய் – தேவையான அளவு

சூப்பரான, சுவையான இட்லி மிளகாய் பொடி..! இப்படி செஞ்சி பாருங்க… | How to Make Idli Podi at Home in TamilRepresentative Image

செய்முறை

✤ முதலில், இட்லி பொடி செய்வதற்குத் தேவையான பொருள்களை மேற்கூறியவாறு எடுத்துக் கொள்ளலாம்.

✤ இதில், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்டவற்றை பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக, பருப்பைத் தீய விடாமல் லேசான பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

✤ இதனைத் தொடர்ந்து, கருவேப்பிலையை நன்றாகக் கழுவி காய வைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.

✤ பின், சுத்தம் செய்யப்பட்ட கருவேப்பிலையை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிதமான தீயில் வறுக்கவும்.

✤ மிக்ஸி ஜாரில் பொடி அரைக்கும் போது, துளியும் ஈரம் இல்லாமல் சுத்தமாக எடுத்து வைக்க வேண்டும். இல்லையெனில் பொடி நமத்து போவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

✤ இவ்வாறு அரைக்கப்படும் போது, மிளகாய் பொடியை சொர சொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். லேசாக அரைப்பதை விட, சொர சொரப்பாக இருப்பதில் இட்லி பொடியின் சுவை கூடுதலாக இருக்கும்.

✤ இந்தப் பொடியை நெய் அல்லது நல்லெண்ணெயுடன் கலந்து இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

✤ மேலும், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

✤ இத்துடன் இட்லி பொடி அரைக்கும் போது, சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இது இட்லி பொடிக்கு கூடுதல் சுவையைத் தரும்.

✤ இவ்வாறு சுவையான மற்றூம் சூப்பரான இட்லி பொடி தயாராகி விடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்