Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அசத்தலான சுவையில் பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?| Palapalam Payasam Seivathu Eppadi

Gowthami Subramani Updated:
அசத்தலான சுவையில் பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?| Palapalam Payasam Seivathu EppadiRepresentative Image.

பலாப்பழம் என்றாலே அதற்கு தனி ஒர் சுவை உண்டு. பலாப்பழத்தில் பல வகையான வெரைட்டி டிஷ்களை செய்யலாம். அந்த வகையில் பலாப்பழ பாயாசமும் ஒன்று. இதனை நம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். புத்தாண்டு கொண்டாட்டத்தில், இந்த இனிப்பான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அசத்தலான சுவையில் பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?| Palapalam Payasam Seivathu EppadiRepresentative Image

தேவையான பொருள்கள்

பலாப்பழம் – 20

வெல்லம் – 150 கிராம்

தேங்காய் பால் – 2 கப்

முந்திரி – தேவையான அளவு

ஏலக்காய் – 6 (பொடியாக்கப்பட்டது)

பிஸ்தா – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

அசத்தலான சுவையில் பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?| Palapalam Payasam Seivathu EppadiRepresentative Image

செய்முறை

முதலில், பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின், அதில் ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழகத்தை நன்றாக வேக வைக்க வேண்டும். அதன் பிறகு, சிறிது நேரம் ஆற வைத்து சூடு ஆறிய பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின், கடாயில் நெய் ஊற்றி பிஸ்தா, முந்திரி சேர்த்து நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு, பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லப் பாகை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இது நன்றாக கொதித்த பிறகு, மசித்து வைத்திருக்கும் பலாப்பழ விழுதை அதில் சேர்த்து, அதன் பிறகு ஏலக்காய் மற்றும் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விட வேண்டும்.

அதன் பிறகு, நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பிஸ்தா, மற்றும் பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு, இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தி இறக்கி விடலாம்.

இப்போது, சுவையான இனிப்பான பலாப்பழ பாயாசம் தயார் ஆனது. இதனை புத்தாண்டில் நம் வீட்டிலேயே செய்து மகிழலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்