நறுமணமிக்க மூலிகையாக விளங்கும் கற்பூரவல்லி மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாக அமைகிறது. கற்பூரவல்லியில் அதிகளவிலான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியது. கற்பூரவல்லி இலையில் மருத்துவ சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தக் கூடியதாக அமைகிறது. இதில் உள்ள மருத்துவ நன்மைகள் இருமல் மற்றும் சளியைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும், இவை ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
கற்பூரவல்லி பயன்கள்
கற்பூரவல்லி இலையானது, பெரும்பாலும் இருமல், சளி உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள இலைச்சாற்றில் சிறிது கல்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், சளி மற்றும் இருமலைக் குணப்படுத்துவதுடன், அதனால் வரும் நெஞ்சு வலிக்கும் சிறந்த நிவாரணமாக அமையும். பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய மார்பு சளி நோய், இருமல் உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாக்க கற்பூரவள்ளி பயன்படுகிறது.
கற்பூரவல்லி டீ
கற்பூரவல்லித் தலைகளை அப்படியே உண்பதாலும், அதிலிருந்து சாறு தயாரித்து அருந்துவதன் மூலமும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியவையாக அமையும். அந்த வகையில், கற்பூரவல்லி டீயையும் தயாரித்து அருந்தலாம். கற்பூரவல்லி டீ தயாரிப்பது மிகவும் சுலபமாகும். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் காலை நேரத்தில் பால் காபி, டீ குடிப்பதை விட கற்பூரவல்லி டீ அருந்துவதன் மூலம் பல்வேறு பயன்களைப் பெறலாம். இதில், கற்பூரவல்லி டீ தயாரிக்கத் தேவையான பொருள்கள் மற்றும் அதன் முறைகளைப் பற்றிக் காண்போம்.
தேவையான பொருள்கள்
கற்பூரவல்லி இலைகள் -5
தேன் – தேவையான அளவு
டீ தூள் – 1 டீஸ்பூன் அளவு
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி – அரை துண்டு (1/2)
மிளகு – 4
ஏலக்காய் – 1
கற்பூரவல்லி டீ செய்யும் முறை
✤ முதலில் கற்பூரவல்லி இலைகளைத் தண்ணீரில் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
✤ பின், கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டுக் கொதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
✤ அதன் பின், கற்பூரவல்லி இலைகளைப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
✤ கொதிக்கும் கற்பூரவல்லி இலை நீரில், இஞ்சி துண்டை சேர்த்து, பின் மிளகு, ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கொள்ளலாம். இதனை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
✤ நன்றாக கொதித்த பின், இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த வடிகட்டிய நீரில் தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த கற்பூரவல்லி டீயை அருந்துவதால், சளி, இருமல் உள்ளிட்டவை விலகி விடும். இது மாலை நேரத்தில் குடிக்க இதமாக இருப்பதுடன், உடலுக்கு நன்மையை அளிக்கக் கூடியதாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…