இப்போதெல்லாம் முன்பை போல சகஜமாக இரண்டு பெண்களை ஒன்றாக இணைந்து மனம் விட்டு பேசுவது, வெளியில் செல்வது, நட்பாக பழகி கொள்வது போன்ற விஷயங்கள் செய்ய முடிவதில்லை. இதற்கு காரணம் பெண்ணும் பெண்ணும் கலவி கொள்ளும் 'லெஸ்பியன்' [Lesbian] என்ற உறவு அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனால் சாதாரண நண்பர்களாக இருக்கும் பெண்களையும் மற்றவர்கள் சந்தேகமாக தான் பார்க்கின்றனர்.
ஆனால், முகம் சுழிக்கும் அளவிற்கு இந்த ஓரினச் சேர்க்கை முறை என்பது அவ்வளவு தவறான உறவு முறை அல்ல. தற்போது சகஜமான ஒரு வாழ்க்கை முறையாகவே மாறிவருகிறது. ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதும், ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதும் மட்டுமே ஈர்ப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. மனதிற்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுடன் இணைந்து வாழ ஆசைப்படுவார்களே தவிர பாலினத்தை பொறுத்து வருவது இல்லை.
யாரும் பிறக்கும்போதே லெஸ்பியனாக பிறப்பது கிடையாது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தான் இப்படி தனது பாலினத்தில் காதல் கொள்கின்றனர் பெண்கள். அதன்படி, நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ ஒரு லெஸ்பியன் என்பதை உணர்த்தும் பொதுவான அறிகுறிகள் இருக்கின்றன. இவற்றை வைத்து லெஸ்பியன் என்பதை அறிந்துக் கொள்ள முடியும். இருப்பினும், இந்த அறிகுறிகள் எல்லோரும் வெளிபடும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் உடல்நிலையும் சூழ்நிலையையும் பொருத்து வேறுபடும்.
ஒருவர் லெஸ்பியன் என்பதற்கான பொதுவான அறிகுறிகளில் ஒன்று பெண்கள் மீதான அதீத ஈர்ப்பு. உதாரணமாக, பெண்களின் உடல் தோற்றத்தைப் போற்றுவது, ஒரு பெண்ணுடன் இருப்பதை போன்று அடிக்கடி கற்பனை செய்துக்கொள்வது, பெண்களின் உடல்பாகங்களை பார்க்க விரும்புவது, பெண்களுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பது போன்ற பல்வேறு வழிகளில் வெளிப்படும். இப்படி தொடர்ந்து பெண்களிடம் ஈர்க்கப்படுவதை கண்டால், அவர்கள் ஒரு லெஸ்பியன் என்பதற்கான அறிகுறியாகும்.
ஒரு லெஸ்பியனாக இருப்பதற்கான மற்றொரு பொதுவான அறிகுறி, ஒரு பெண் மற்ற பெண்களுடன் பாலியல் அல்லது காதல் அனுபவங்களை அனுபவித்து மகிழ்வது. உதாரணமாக, எதிர்பாராமல் பெண் மற்றொரு பெண்ணை முத்தமிட்டிருக்கலாம். அது முத்தம் கொடுப்பவருக்கு அல்லது முத்தத்தை வாங்குபவருக்கோ மிகவும் பிடித்திருக்கும். இவ்வாறு அடிக்கடி கொடுக்க வேண்டும் ஆசைப்படுவதும் அவர்கள் ஒரு லெஸ்பியன் என்பதற்கான அறிகுறி.
லெஸ்பியனாக இருந்தால் அந்த பெண் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு ஆண் வேண்டும் என்று யோசிக்கவே மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே உணர்ச்சி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பெண்களுடன் திருப்தி அடைந்துவிட்டார் என்று அர்த்தம். இது தம்பதிகளாக அல்லது காதலர்களாக இருக்கும் பெண்களுக்கும் பொருந்தும். அதாவது, காதலனோ அல்லது கணவனோ நெருங்கி வரும்போது அவர்களை வெறுத்து ஒதுக்குவார்கள். ஒரு ஆணுடன் உடலுறவு பற்றி சிந்திக்க கூட அவர்களால் முடியாது என்றால் அதுவும் லெஸ்பியன் என்பதற்கான அறிகுறியாகும்.
ஒரு லெஸ்பியன் இருப்பதற்கான மற்றொரு பொதுவான அறிகுறி மற்ற பெண்களுடன் வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டிருப்பது. இந்த உணர்ச்சிபூர்வமான தொடர்புதான் லெஸ்பியன்களை பொதுவான பெண்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. உதாரணமாக, நிறைய நண்பர்கள் இருந்தும் ஒரு பெண்ணிடம் மட்டும் ஆழமான உரையாடல்களை நடத்துவது.
பாரம்பரியமாக பெண்கள் கடைப்பிடிக்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டாதது. இது பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம், அதாவது மேக்அப் அல்லது பெண்களின் ஆடைகளை அணிய விரும்பாதது அல்லது திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை நினைத்து வெறுப்பது போன்றவையும் லெஸ்பியன் என்பதை உணர்த்தும் அறிகுறியே. அதேபோல், உங்கள் பெண் நண்பர்கள் உடலுறவு அல்லது ஆண் பிறப்புறுப்பு பற்றி பேசுகிறார்கள். தலைப்பைப் பற்றி நீங்கள் சங்கடமாகவோ அல்லது வெறுப்பாகவோ உணர்ந்தால், அது ஆண்களுக்கு பாலியல் ரீதியாக ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
இருப்பினும், சில பெண்கள் ஆண்கள் தன்னுடைய வாழ்க்கையில் வந்தால் அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தும் இப்படி வெறுப்பது உண்டு. அதனால், இந்த அறிகுறியோடு இதில் கூறப்பட்ட அறிகுறிகளையும் கவனிப்பது நல்லது.
ஈர்ப்பு என்பது எப்போதும் பாலியல் ரீதியாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே ஒரு பெண் பெண்களிடம் ஈர்க்கப்பட்டாலும், அவர்களுடன் உடலுறவு கொள்ள விரும்பவில்லை என்றால், அதுவும் அவர்கள் ஒரு லெஸ்பியன் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும், ஒருவர் பெண் நண்பர்களுடன் நட்பாக பழகுவதும் லெஸ்பியன் என்று அர்த்தமல்ல.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…