Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

Elon Musk's Lifestyle: ஆடம்பரத்திலும் எளிமை..வேற லெவலில் வாழும் எலான் மஸ்க்...எப்போதும் பரபரப்பாக இருக்கும் மஸ்க்கின் கூலான லைஃப்..!

Nandhinipriya Ganeshan April 26, 2022 & 11:30 [IST]
Elon Musk's Lifestyle: ஆடம்பரத்திலும் எளிமை..வேற லெவலில் வாழும் எலான் மஸ்க்...எப்போதும் பரபரப்பாக இருக்கும் மஸ்க்கின் கூலான லைஃப்..!Representative Image.

Elon Musk's Lifestyle: உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் (Elon Musk) புதுமையின் மறு உருவமாக திகழ்கிறார். பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். விண்வெளிக்கு சுற்றுலா பயணம் மற்றும் தானாக இயங்கும் கார் என பல புதுமையான கண்டிப்புகளை மக்களின் முன் நிறுத்தி வருகிறார். தற்போது, மனித மூளையில் சிப் பொருத்துவதற்கான புதிய ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... எப்போது பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இம்மாமனிதரின் கூலான வாழ்க்கையை பற்றி தெரிந்தால் உண்மையில் பிரமிக்க வைக்கும் வகையில் தான் இருக்கிறது. வாங்க..! ஆடம்பரத்திலும் எளிமையாக வாழும் எலான் மஸ்க் வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்வோம்..

சிறுவயது வாழ்க்கை

இவருக்கு சிறுவயதில் இருந்தே புத்தங்களை படிக்க ரொம்ப பிடிக்குமாம். அவர் அதிகம் நேரம் நூல்நிலையத்தில் தான் அதிகம் இருப்பாராம். இதனால், அங்குள்ள அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டாராம். ராக்கெட், விண்வெளி, டெக்னாலஜி போன்ற துறைகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இதுதான் தற்போது விண்வெளியில் துறையில் ஒரு புதிய சாதனையை படைக்க முதல் படியாக அமைந்தது.

அன்றைய காலகட்டத்தில் கணிணி மொழி கற்பது உண்மையில் மிக கடினம். ஆனால் சிறுவயதில் எந்த ஒரு ஆசிரியரும் இல்லாமல் கணினி மொழியை தாமாகவே புத்தகம் வழியே கற்று கொண்டவர்.சிறுவயதில் இருந்தே அதிக கஷ்டங்கள், அவமானங்களை கடந்து, இப்போது உலகமே அன்னார்ந்து பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார். பணக்காரர் என்று சொன்னாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருபவர் எலான் மஸ்க் மட்டும்தான்.

செவ்வாயில் எலான் மஸ்க்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம்  செய்ய வேண்டும் என்பதே இவருடைய முக்கிய கனவாக இருந்தது. அப்போது, ரஸ்யாவிற்கு சென்று ராக்கெட் வாங்க வேண்டும் என்று விஞ்ஞானியிடம் கேட்ட போது ஒரு ராக்கெட்டின் விலை 8 மில்லியன் டாலர் என்று சொன்னார்களாம். இதை கேட்ட மஸ்க் சிறிதும் துவண்டு விடாமல், ராக்கெட் பாகங்கலை வெளியில் வாங்கினால் தான் அதிக விலை, அதற்கு நாமே தயாரித்தால் என்ன என்று நினைத்தார்.

அப்படி உருவாகியதுதான் Space x நிறுவனம். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முதல் படி இதுவே, அதுமட்டுமல்லாமல், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் முதல் தனியார் நிறுவனமும் இதுதான் என்ற பெருமையை சேர்த்தார். அதன் பிறகு, எலான் மஸ்க் TESLA CAR நிறுவனத்தை 70 மில்லியனிற்கு வாங்கினார். மின்சாரத்தில் இயங்கும் காரை தயாரிக்க TESLA  என்ற கம்பெனியை உருவாக்கினார்.

இப்போது ட்விட்டரும் மஸ்க் கையில்

கடந்த சில நாட்களாகவே இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருந்தது. அதற்கெல்லாம் முற்றும் வைக்கும் வகையில், சுமார் மில்லியன் கணக்கான பயனர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்கள் வசிக்கும் சமூக ஊடகத் தளத்தை, உலகின் மிக பெரிய பணக்காரரான எலான்மஸ்க் $44 பில்லியனுக்கு ட்விட்டரையும் வாங்கிவிட்டார். இனிமே ட்விட்டர் ஒரு பொது சமூக ஊடக

மஸ்க்கின் கூலான லைஃப்

எலான் மஸ்க் ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார். இவருக்கு சொந்த வீடு கிடையாது. ஆனால், ஒவ்வொரு இரவும் அவருடைய நண்பர்கள் வீட்டில் தங்க முடியாது என்பதற்காக ஒரு ஜெட் விமானத்தை வாங்கி அதில் வசித்து வருகிறார். இந்த விமானம் 2015 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது மஸ்க்கின் முதல் விமானம் கிடையாது. இதற்கு முன்னரே 2004 ஆம் ஆண்டு assault Falcon 900B என்ற விமானத்தை வாங்கிவிட்டார்.

இதோபோல், அமேசான் மொகல் ஜெஃப் பெசோஸ் மற்றும் கால்பந்தாட்ட ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் ஒவ்வொருவரும் Gulfstream G650ER ஐ வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மஸ்க் இப்போது தங்கியிருக்கும் ஜெட் விமானத்தின் விலையை கேட்டால், அசந்து போயிடுவிங்க. இந்த ஜெட் விமானத்தின் விலை 66.5 மில்லியன் டாலராம். கிட்டதட்ட R1 பில்லியனாம். இதை இயக்குவதற்கு மட்டும் மில்லியன் டாலர் கணக்கில் செலவு ஆகுமாம். வாஷிங்கடன் போஸ்ட்டார் தரவுகளின்படி, 2018 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தனது தனிபட்ட ஜெட் விமானத்தில் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவை சுற்றி பார்த்தற்காக 700,000 டாலர் செலவழித்திருக்கிறார். அந்த விமானத்தின் உள்ளே இப்படி தான் இருக்குமாம்...

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்க ளில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்