இந்தியாவில் மட்டுமே மருத்துவ குணம் கொண்ட இலைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். அப்படித் தான் ‘சிட்ரஸ் அண்டர்டோன்’ எனப்படும் தனித்துவமான சுவை மற்றும் மிகவும் நறுமணம் கொண்ட வேதிப்பொருள் உள்ள கறிவேப்பிலை இந்திய சமையல்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
கறிவேப்பிலை வெறும் வாசனைக்காக மட்டுமல்ல அதன் மூலம் ஏராளமான மருத்துவ நன்மைகளும் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். கறிவேப்பிலையின் 5 முக்கியமாக நன்மைகளின் பலன்கள் இதே...
கறிவேப்பிலை வெறும் வாசனைக்காக மட்டுமல்ல அதன் மூலம் ஏராளமான மருத்துவ நன்மைகளும் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். கறிவேப்பிலையின் 5 முக்கியமாக நன்மைகளின் பலன்கள் இதே...
கறிவேப்பிலை உட்கொள்வது அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகள் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
விலங்குகள் மற்றும் பல விதமாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி கறிவேப்பிலை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
கறிவேப்பிலையை நன்றாக மென்று சாப்பிடுவது வலிகளை குறைக்க உதவும் என எலி, முயல் போன்ற கொறித்துண்ணிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கறிவேப்பிலையில் பல்வேறு அழற்சி எதிர்ப்பு இரசாயனங்கள் உள்ளன. மேலும் கறிவேப்பிலை சாற்றில் உள்ள ரசாயனங்கள் வீக்கத்துடன் தொடர்புடைய மரபணுக்கள் மற்றும் புரதங்களைக் குறைக்க உதவுகிறது. இது விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு மூலம் நிரூபிக்
கறிவேப்பிலைச் சாறு அபாயகரமான பாக்டீரியாக்களான கோரினேபாக்டீரியம் டிபி மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பியோஜின்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…