Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Mango Recipes in Tamil: மாம்பழ சீசன் வந்தாச்சு...! நாலே பொருட்களை வைத்து குளுகுளு மாம்பழ புட்டிங் ரெடி..!

Nandhinipriya Ganeshan April 29, 2022 & 07:10 [IST]
Mango Recipes in Tamil: மாம்பழ சீசன் வந்தாச்சு...! நாலே பொருட்களை வைத்து குளுகுளு மாம்பழ புட்டிங் ரெடி..!Representative Image.

Mango Recipes in Tamil: என்ன தான் வெயில் காலம் வந்தாலும், கூடவே நமக்கு பிடிச்ச பழங்களின் சீசனும் ஆரம்பிச்சிடுது. அதில் ஒன்று மாம்பழம்... அதன் கண்ணை கவரும் கலரும், சுவையும், வாசனையும் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? இந்த சமயங்களில் தான் நாம் மாம்பழங்களை ஆசை தீரும் அளவிற்கு சாப்பிட முடியும். இது நாள் வரை நாம் மாம்பழத்தை நேரடியாக அல்லது ஜூஸ் போட்டு தான் குடித்திருப்போம். அதே நேரத்தில் இந்த மாம்பழத்தைக் கொண்டு சில நிமிடங்களில் அனைவருக்கும் பிடித்த புட்டிங் செய்யவும் முடியும். இதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது. மிகவும் சுலபமாக செய்துவிடலாம். சுவையான, ஜில்லென்ற மாம்பழ புட்டிங் (how to make mango pudding at home) எப்படி செய்வது?

மாம்பழ சீசன் வந்தாச்சு...! ரெண்டே நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம் மாம்பழ கேக்..!.

தேவையான பொருட்கள்:

  • மாம்பழம் - 2
  • பால் - 1/4 கப்
  • சர்க்கரை - 1 கப்
  • தண்ணீர் - 1/2 கப்
  • உப்பு - 2 சிட்டிகை
  • சோள மாவு - 1/4 கப்

Summer Drinks Recipe in Tamil: வெயிலுக்கு ஜில்லுனு ஒரு மாம்பழ லஸ்ஸி...இரண்டே பொருள் லஸ்ஸி ரெடி...!.

செய்முறை:

  • முதலில் மாம்பழங்களை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அதோடு 1/2 கப் சர்க்கரை, உப்பு சேர்த்து மிக்ஸில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து அரைத்த மாம்பழ விழுதை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் கால் கப் பால் மற்றும் சோள மாவு இரண்டையும் கட்டியில்லாமல் நன்றாக கரைத்து கொள்ளவும்.
  • மாம்பழ விழுது திக்கான பதம் வந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசலை ஊற்றி கிளறி விடவும்.
  • திக்கான பதம் வந்தவுடன் இறக்கி உங்களுக்கு வேண்டிய வடிவ பாத்திரத்தில் ஊற்றி ஆற விடவும்.
  • நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் வைத்து எட்டு மணி நேரம் குளிரூட்டவும்.
  • எட்டு மணி நேரம் கழித்து மாம்பழ துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.
  • எளிமையான மற்றும் டேஸ்ட்டியான மாம்பழ புட்டிங் ரெடி (Mango Pudding In Tamil)...!

வந்தாச்சு மாம்பழ சீசன்.. குளுகுளு டேஸ்டியான மாம்பழ குச்சி ஐஸ்/மாம்பழ பாப்ஸிகல்..!.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்