Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

Nayanthara Wedding Saree: நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த புடவையில் இத்தனை அம்சங்களா....??

Nandhinipriya Ganeshan June 11, 2022 & 11:30 [IST]
Nayanthara Wedding Saree: நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த புடவையில் இத்தனை அம்சங்களா....??Representative Image.

Nayanthara Wedding Saree: ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் நீண்ட நாள் காத்திருக்க வைத்த லவ்பேர்ட்ஸ் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் பிரமாண்டமாக முடிவடைந்தது. மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற இருவரின் திருமணம் புகைப்படம் தான் வேற லெவலில் இண்டர்னெட்டில் வைரலாகி வருகிறது. இந்த திருமண விழாவை தனியார் நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியதால், எந்த போட்டோவும் வெளியில் வராமால் ரகசியமாகவே இருந்து வருகிறது. ஆனால், விக்னேஷ் திருமணம் முடிந்த உடனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை மட்டும் பகிர்ந்திருக்கிறார். பகிர்ந்த சில மணித்துளிகளிலேயே திருமண புகைப்படங்கள் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவில் அனல் பறக்க வைரலாகி வந்தது. அதில் மணமக்களின் சந்தோஷமான தருணம் பார்ப்பவர்களின் கண்களை மிகவும் கவர்ந்தது. 

திருமணத்தில் நயன்தாராவின் புடவை தான் வேற லெவலில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. யாராடி நீ மோகினி படத்தில் தனுஷ் சொல்லிருப்பாரு, உங்களுக்கு சிகப்பு கலர் புடவை கட்டுனா தேவதை மாதிரி இருப்பிங்கன்னு. அதே மாதிரி அடர் சிவப்பு நிற புடவையில் தேவதை போல ஜொலித்தார் நம்ப நயன்தாரா. அதுமட்டுமல்லாமல், பலரும் அது என்ன வகையான புடவை, எப்படி தயாரித்தார்கள், புடவையின் விலை என்ன என இணையத்தை அலாச ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில், நாமும் இப்போது இந்த புடவையின் முழு விவரத்தையும் (nayanthara wedding bridal look details) பார்க்கப் போகிறோம்.

இந்த புடவையை பிரபல டிசைனர்களான கரீஷ்மா மற்றும் மோனிகா இருவரும் (nayanthara wedding dress designer) உருவாகியுள்ளனர். இந்த புடவை முழுக்க முழுக்க கை எம்ராய்டரிங் தானாம். ஒவ்வொரு டிசைனும் பார்த்து பார்த்து போடப்பட்டுள்ளது. நயன்தாரா லெஹெங்காவை விட புடவையில் தான் ஆர்வமாக இருந்தாராம். இதனால், புடவையின் தோற்றத்தை அழங்கரிக்க, பல்லுவின் நீளத்தை அதிகப்படுத்தி முக்காடாக வடிவமைத்துள்ளனர். இந்த வெயிட் லெஸ் (nayanthara wedding saree material) புடவையின் கவர்ச்சியும், ஸ்காலப் ஹேம் பல்லு பார்டரும் நயன்தாராவிற்கு ஒரு ராயல் டச் கொடுக்கிறது. 

புடவையில் இருக்கும் எம்பிராய்டரி டிசைன்கள் எல்லாம் வெறும் பூ தான் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். இந்த எம்பிராய்டரி டிசைன்கள் கர்நாடாகாவில் மிகவும் பிரபலான கோயிலான ஹோய்சாளா கோயில்களின் சிற்பங்களிலிருந்து இன்ஸ்பையர் ஆகி உருவாக்கப்பட்டவையாம். அதுமட்டுமல்லாமல், நயன்தாராவுக்கு டிரெடிஷனல் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் அவருடைய புடவை முழுவதும் இம்மாதிரியான சிலைகளை தைத்து மிகவும் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர். இந்த புடவையின் விலை சுமார் 50 லட்சத்திற்கு மேல் இருக்கும் (nayanthara wedding saree cost)  என்று சொல்கிறார்கள். 

மணப்பெண்களுக்கு பொதுவாக பிளவுஸ் தான் புடவையின் அழகை உயர்த்தி காட்டும். அதுபோல நயன்தாராவின் பிளவுஸ் முழுக்க லட்சுமி தேவியின் உருவம் எம்ப்ராய்டரி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். வங்கி வைக்கும் இடத்திலும் லட்சுமியின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், புடவையில் விக்னேஷ், நயனின் காதலை பரைசாற்றும் விதமாக அவரின் பெயர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

அதோபோல் விக்னேஷ் சிவனின் உடையும் வேற லெவலில் வடிவமைத்திருக்கிறார்கள். அவர் அணிந்திருந்த குர்தா, வேஷ்டி, சால்வை ஆகியவற்றை ஜேட் அட்லியரின் தலைசிறந்த கைவினையாளர்களால் வடிவமைக்கப்பட்டவை. சால்வை முழுவதும் கையால் போடப்பட்ட "ஏக் தார்" எம்பிராய்டரி டிசைன்களால் வடிவமைக்கப்பட்டதாம். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்