Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Palani temple: பழனி தைப்பூசத் திருவிழா; பக்தர்களுக்கு பேரதிர்ச்சி

Udhayakumar January 12, 2022 & 00:00 [IST]
Palani temple: பழனி தைப்பூசத் திருவிழா; பக்தர்களுக்கு பேரதிர்ச்சிRepresentative Image.

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு பழனி செல்ல அனுமதி இல்லை என்கிற உத்தரவு வெளியாகியுள்ளது.

பழனியில் இன்று துவங்கி வரும் 21ம் தேதி வரை தைப்பூசத் திருவிழா நடைபெறுகி்றது.  கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழக அரசின் உத்தரவுப்படி வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், நாளை மறுநாள் அதாவது வரும் வெள்ளிக்கிழமை முதல் வருகிற 18ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என அரசு அறிவித்திருப்பதால், இன்றே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து வருகின்றனர். 

மண்டகப்படிதாரர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவை ஆகம விதிகளின்படி கோவில் மூலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 17ம் தேதி நடத்தப்படவுள்ள நிலையில், அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  18ம் தேதி தைப்பூசத் திருவிழாவுக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் பணியாளர்கள் மூலம் தேரோட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி நடைபெறவுள்ள தெப்ப உற்சவம் நிகழ்ச்சியும் கோவில் பணியாளர்கள் மூலம் நடத்தப்படும். இவை அனைத்தும் யூடியூப் சேனல், வலைத்தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்