நமக்கு தினமும் காலை வேளையில் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அழுத்து போயிருக்கும். இதுவே குழந்தைகள் வீட்டில் இருந்தா அம்மா ஏதாச்சும் வித்தியாசமா செஞ்சி கொடுங்கன்னு கேப்பாங்க. நமக்கு சமைக்குற நேரம் தவிர இதுக்காக தனியா நேரம் ஒதுக்கி காலைல செய்ய முடியுமான்னு கேட்டா? அது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா சுலபமான முறையில் 5 நிமிடத்தில் செய்ய முடியும் என்றால் ட்ரை பண்ணி பார்ப்பதில் தவறு எதுவும் இல்லையே.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவையாக சாப்பிடலாம் இந்த பன்னீர் புர்ஜி சாண்ட்வெஜை. வீட்டில் பன்னீர், பிரட், வீட்டு சமையல் பொருட்கள் இருந்தால் போதும். இதை எப்படி படி படியாக செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பாப்போம்.
பிரட் - 4 துண்டு
பன்னீர் - 1/4 கப் (துருவியது)
வெங்காயம் - 1 (வட்டமாக நறுக்கியது)
தக்காளி - 1 (வட்டமாக நறுக்கியது)
நெய் - தேவையான அளவு
சீரகம் - 1/2 ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சுள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
முதலில் பிரட் டோஸ்ட் செய்து கொள்ளவும். அதற்கு அடுப்பில் தவா ஒன்றை வைத்து சூடேற்றவும். பின்னர் பிரட்டின் முன்னும் பின்னும் நெய் தடவி பொன்னிறம் வரும் வரை டோஸ்ட் செய்யவும்.
அதனை பின்னர் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அடுத்து உள்ளே வைக்க புர்ஜியை ரெடி செய்ய வேண்டும்.
அதற்கு முதலில் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து நெய் 1 ஸ்பூன் ஊற்றி சூடேற்றவும். பின்னர் பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது துருவிய பன்னீர், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து பிரட் டோஸ்ட்டின் மீது பன்னீர் மசாலாவை வைத்து, அதற்கு மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை வைக்கவும்.
அதற்கு மீது வாசனைக்காக கொத்தமல்லி தலையை நறுக்கி மேலே தூவி விட்டு மற்றொரு பிரட் டோஸ்ட் துண்டை வைத்து பாதியாக கட் செய்துகொள்ளுங்கள்.
இப்போது சுவையான பன்னீர் புர்ஜி சாண்ட்விச் தயாராகி விட்டது. அவ்ளோ தாங்க வெறும் 5 நிமிடமும் போதும் இனிமே வெரைட்டியா காலை பிரேக் பாஸ்ட் சாப்பிடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…