பாணிபூரி நல்லா கார சாரமா சாப்பிட தான் பிடிக்கும். ஆனா அதை விட டேஸ்ட்டா சில்லுனு ஐஸ்கிரீம் பாணிபூரி சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இது வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். இதுக்கு பெருசா வேலை அல்லது நேரம் செலவழிக்க தேவையில்லை. சிம்பிளா ருசியான பாணிபூரி ஐஸ்கிரீம் எப்படி செய்றதுன்னு இந்த பதிவில் பாப்போம்.
ரெடி மேட் பாணிபூரி
ஐஸ்கிரீம் - 1 கப்
கோகோ பவுடர் - 2 ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
சர்க்கரை - 3 ஸ்பூன்
பால் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
முதலில் ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர், சோள மாவு, சர்க்கரை ஒன்றாக போட்டு நன்கு கிண்டி விடவும்.
அதற்கு பின்னர் பால் மற்றும் தண்ணீர் சேர்ந்து கூல் பதத்திற்கு கிளறி விடவும். குறிப்பு - கட்டியில்லாமல் நன்கு கிளற வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இந்த கலவையை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். அந்த சமயத்தில் கரண்டி ஒன்றை வைத்து அடியில் பிடிக்காமல் இருக்க கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு கொதித்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி சற்று ஆறியதும், பிரிட்ஜில் வைக்கவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி ரெடி மேட் பாணிபூரியை அதில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
சிறிது நேரம் களித்து பாணிபூரி, ஐஸ்கிரீம், தயார் செய்த சாக்லேட் சாஸ் மற்றும் நறுக்கிய பாதாம், பிஸ்தா ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது பாணிபூரியில் மேல் பகுதியை சற்று உடைத்து விட்டு அதில் ஐஸ்கிரீம் ஒரே ஸ்பூன், அதன் மீது நட்ஸ் , பிறகு சாக்லேட் சாஸ் வைத்து மேலே சிறிது நட்ஸை தூவி சாப்பிடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…