Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

சினிமா நடிகைகள் போல முகப்பரு இல்லாம முகம் பளபளப்பாக இருக்கனுமா? இத பண்ணுங்க..

Nandhinipriya Ganeshan October 24, 2022 & 10:00 [IST]
சினிமா நடிகைகள் போல முகப்பரு இல்லாம முகம் பளபளப்பாக இருக்கனுமா? இத பண்ணுங்க..Representative Image.

Pimples Treatment in Tamil: முகப்பரு தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடியது. பருக்கள் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம் ஆனால் பெரும்பாலும் நெற்றி, முகம், தோள்கள், மார்பு மற்றும் முதுகு பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. முகப்பரு பெரும்பாலும் இளம்பருவத்திலோ அல்லது பதின்ம வயதிலோ ஏற்படுகிறது. 

காரணங்கள்:

எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் அடைப்பு, இறந்த தோல் செல்கள்

சில நேரங்களில் தலையில் பொடுகு தொல்லை இருந்தாலும் முகத்தில் பருக்கள் உருவாகும்.

மாசுபாடு மற்றும் வானிலை, குறிப்பாக கோடைக்காலத்தில் முகப்பருக்கள் அதிகமாக தோன்றலாம்.

காரணிகள்:

  • ஹார்மோன் மாற்றம்

  • மன அழுத்தம்

  • மரபு வழி

  • மாதவிடாய் சுழற்சி

  • தோல் சுழற்சி

  • தூக்கமின்மை

  • இரசாயன சேர்மங்கள்

  • சில வகை மருந்துகள்

  • அதிக சர்க்கரை உணவுகள்

  • அதிகப்படியான கொழுப்பு சுத்திகரிப்பட்ட உணவுப் பொருட்கள்

  • புகை பிடித்தல்

  • பால் பொருட்கள்

  • உடல் பருமன்

  • கருப்பை நீர்க்கட்டி

  • கர்ப்ப காலம்

  • நாளமில்லா சுரப்பி நோய்கள்

சினிமா நடிகைகள் போல முகப்பரு இல்லாம முகம் பளபளப்பாக இருக்கனுமா? இத பண்ணுங்க..Representative Image

முகப்பருவை விரட்ட இயற்கை வீட்டு வைத்தியம்:

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் சிட்ரிக் அமிலம் உள்ளது இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்து, தழும்புகளை மறைய செய்கிறது. அதனால் தான் பருக்களுக்கு சிகிச்சையளிக்க எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக இது (pimples remove tips in tamil) பயன்படுத்தப்படுகிறது. இதை அப்படியே தடவினால், முகப்பருவின் பாதிப்பு இரட்டிப்பாகி விடும். எனவே கவனமாக பயன்படுத்துங்கள்.

  • ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஊற்றி அதில் 3 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

  • ஒரு காட்டனை அதில் நனைத்து பருக்கள் மீது தடவவும். 15-20 விநாடிகள் விட்டு, தண்ணீரில் கழுவ வேண்டும். 

  • அதன்பின், மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். இதை ஒரு நாளைக்கு 1-2 முறை செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

டீ ட்ரீ ஆயில்

  • 1 டீஸ்பூன் டீ ட்ரீ ஆயிலை 8-9 டீஸ்பூன் தண்ணீரில் கலந்துக் கொள்ளவும்.

  • காட்டனை பயன்படுத்தி அதில் நனைத்து முகப்பருக்களின் மீது தடவவும்.

  • பின்னர், தண்ணீரில் கழுவிவும். இதை ஒரு நாளைக்கு 1-2 முறை செய்து வர முகப்பருவை எளிதில் விரட்டலாம்.

இலவங்கப்பட்டை மற்றும் தேன் மாஸ்க்

  • 2 ஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை கலக்கி, மாஸ்க் போல் முகத்தில் தடவிக் கொள்ளவும்.

  • இதை 10-15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து, பின் தண்ணீரில் கழுவி விடுங்கள்.

  • சிறந்த முடிவுகளுக்கு இதை வாரத்திற்கு 2 முறை முயற்சி செய்து பாருங்கள்.

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாலிபினால்கள் காணப்படுகின்றன. இவை இரண்டும் முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருவால் ஏற்பட்ட வீக்கத்தையும் குறைக்கிறது. 

  • கிரீன் டீ பேக்கிட்டை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். அதை ஆற வைத்து, அதில் பஞ்சை பயன்படுத்தி நனைத்து முகத்தில் தடவவும்.

  • பின்னர், கழுவி விடுங்கள். இதை வாரத்திற்கு 2 லிருந்து 3 முறை செய்து பாருங்கள், மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

சினிமா நடிகைகள் போல முகப்பரு இல்லாம முகம் பளபளப்பாக இருக்கனுமா? இத பண்ணுங்க..Representative Image

பப்பாளி

  • ஒரு கப் பப்பாளி பழத்தை எடுத்து அதை பிசைந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

  • இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

  • உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். தேவைப்பட்டால் மாய்ஸ்சரைசரைப் போட்டு கொள்ளுங்கள்.

  • பருக்கள் இல்லாத முகத்தைப் பெற வாரம் ஒரு முறை தவறாமல் இதை செய்யுங்கள்.

அலோ வேரா ஜெல்

பருக்களை போக்க இது ஒரு எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம். கற்றாழை ஒரு வெப்பமண்டல தாவரமாகும், மேலும் அதனுடைய ஜெல் சொறி, பருக்கள், தீக்காயங்கள் மற்றும் பிற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

  • ஒரு கரண்டியை பயன்படுத்தி கற்றாழையின் ஜெல்லை கீறி எடுத்துக்கொள்ளவும்.

  • இந்த ஃபிரஸ் கற்றாழை ஜெல்லை நேரடியாக உங்கள் சருமத்தில் அப்ளை செய்து, நன்றாக காய்ந்து உடன் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள்.

  • நீங்கள் இதை ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்தலாம். எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

ஜோஜோபா ஆயில்

ஜோஜோபா விதைகளிலிருந்து ஜோஜோபா ஆயில் எடுக்கப்படுகிறது. இந்த மெழுகுப் பொருள் சேதமடைந்த சருமத்தை சரிசெய்யவும், காயம் குணப்படுத்துவதை விரைவுபடுத்தவும் உதவுகிறது. மேலும், இந்த எண்ணெயில் உள்ள வேறு சில காரணிகள் சிவத்தல், வீக்கம் மற்றும் அழற்சி புண்கள் போன்ற அனைத்து தோல் அழற்சிகளையும் குணப்படுத்துகிறது. 

  • பஞ்சில் சில துளிகள் ஜோஜோபா ஆயிலை எடுத்து, முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி ஓரிரு நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.

  • இதை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் கழுவவும்.

  • இதை வாரத்தில் இரண்டு முறை தவறாமல் செய்து வர முகப்பரு காணாமல் போகும்.

எலுமிச்சை சாறு

  • தயிருடன் 2-3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட்டாக கலக்கி கொள்ளவும்.

  • இதை முகப்பருவின் மீது நேரடியாக தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

  • பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி மாய்ஸ்சரைசரைப் போட்டுக் கொள்ளுங்கள்.

  • முகப்பரு ஆறும் வரை இதை தவறாமல் கடைபிடியுங்கள்.

தேங்காய் எண்ணெய்

முகப்பருவை குணப்படுத்த சிறந்த இயற்கை வீட்டு வைத்தியம் (pimples home remedies in tamil) இதுவாகும். இதில் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தின் பளபளப்பை மீட்டு கொடுக்கும். 

  • தினமும் குளிக்க செல்வதற்கு முன்னர் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் குளிக்கவும்.

  • அப்படி இல்லையென்றால், சில துளிகளை எடுத்து உங்கள் முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 

  • ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

சினிமா நடிகைகள் போல முகப்பரு இல்லாம முகம் பளபளப்பாக இருக்கனுமா? இத பண்ணுங்க..Representative Image

முகப்பருக்களுக்கான மாற்று சிகிச்சைகள்:

இந்த சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது என்பதால் இதை முயற்சிப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது சிறந்தது.

லேசர் சிகிச்சை - இப்போதெல்லாம், லேசானது முதல் கடுமையான முகப்பருவுக்கும் சிகிச்சை தான் பயன்படுத்தப்படுகிறது. முகப்பருவை அகற்ற இது ஒரு பாதுகாப்பான மறறும் பயனுள்ள முறையாகும்.

பென்சாயில் பெராக்சைடு - பென்சாயில் பெராக்சைடு கொண்ட கிரீம்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களில் பொதுவாக சேர்க்கப்படும் ஒரு மூலப்பொருளாகும். இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொள்ளுங்கள். ஏனெனில் அதிக அளவு பென்சாயில் பெராக்சைடு உங்கள் சருமத்தை வறட்சியாக்கி, உங்கள் நிலையை மோசமாக்கலாம்.

சாலிசிலிக் அமிலம் - சாலிசிலிக் அமிலம் சாலிசிலேட்டுகள் எனப்படும் மருந்து வகைகளில் இருந்து வருகிறது. இது உங்கள் சருமத்தை சேதப்படுத்தாமல் முகப்பருவை குணப்படுத்துகிறது. இந்த அமிலத்தை சருமத்தில் தடவும்போது, ​​இறந்த செல்களை வெளியேற்றி வீக்கத்தை குறைக்கிறது.

Tretinoin - இது ஒரு வகை டிரான்ஸ்-ரெட்டினோயிக் அமிலமாகும், இது ஆரம்ப கட்டங்களில் இருக்கும் பருக்கள் மற்றும் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இந்த க்ரீமை உங்கள் சருமத்தில் தடவி வருவதால், துளைகளை அடைத்து புதிய செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

மைக்ரோடெர்மபிரேஷன் - மைக்ரோடெர்மபிரேஷன் என்பது ஒரு பிரபலமான அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சையாகும். லேசானது முதல் கடுமையான முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கு இது ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முறையாகும். இந்த உரித்தல் செயல்முறையானது தோலை உரித்து அகற்றுவதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை மென்மையாக மாற்றுகிறது.

சல்பர் - இது ஒரு பாக்டீரியா எதிர்ப்பு முகவர். சல்பர் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்து, வீக்கத்தை குறைக்கிறது. இது உங்க சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தாது. அதுமட்டுமல்லாமல், பென்சாயில் பெராக்சைடு போல கடுமையானதும் அல்ல.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்