Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இட்லி சாப்பிட்டால் கேன்சர் வரும்.. அதிர்ச்சி தகவல்..

Nandhinipriya Ganeshan October 05, 2022 & 15:10 [IST]
இட்லி சாப்பிட்டால் கேன்சர் வரும்.. அதிர்ச்சி தகவல்..Representative Image.

இட்லி என்றவுடன் பலரும் அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள். அதில் நானும் ஒன்று தான். ஆனால், உண்மையில் நாம் வீட்டில் செய்து சாப்பிடும் இட்லியால் புற்றுநோய் வராது. பின்னர், எப்படி வருகிறது? வாங்க பார்க்கலாம்.

உண்மையில் இட்லிகள் தமிழர்களின் பாரம்பரியமான உணவு. அதுமட்டுமல்லாமல், இட்லி ஒரு கொழுப்பு இல்லாத சிறந்த டயட்டிங் உணவும் கூட. காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகம் சாப்பிடக் கூடிய உணவு என்றால் அது இந்த இட்லியாக தான் இருக்க முடியும். வீட்டில் சமைத்து சாப்பிடுவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், காலை மற்றும் இரவு நேரங்களில் கடைகளில் வாங்கி சாப்பிடுவர்களுக்கு தான் கவனத்தில் இருக்க வேண்டும். இந்த அவசரமான காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இந்த இட்லி உணவையும் விட்டு வைக்கவில்லை. 

ஹோட்டல்கள், திருமணங்கள் போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு இட்லி தயாரிக்கும் போது பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பேப்பர் விரித்து அதில் இட்லி மாவு ஊற்றி உணவு தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இட்லி சுட வேண்டுமென்றால் துணியை பயன்படுத்தி தான் வேக வைத்து எடுப்பார்கள். அதில் கொஞ்சம் இட்லி துணியிலேயே ஒட்டிக்கொள்கிறது. இந்த சிரமத்தை குறைக்கவே இந்த பிளாஸ்டிக் பயன்பாடு. 

ஆனால், இப்படி பிளாஸ்டிக் கப்பில் இட்லி போன்ற உணவுகள் தயாரிக்கப்படும்போது இரைப்பை கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகம் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்