Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Maha Shivratri 2023 Recipes: மென்மையான பூரண கொழுக்கட்டை இப்படி செஞ்சி அசத்துங்க...

Gowthami Subramani Updated:
Maha Shivratri 2023 Recipes: மென்மையான பூரண கொழுக்கட்டை இப்படி செஞ்சி அசத்துங்க...Representative Image.

மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்குப் படையலிடுவதற்கு பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம். பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி இதில் பார்க்கலாம். மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்குப் படைக்க வேண்டிய நெய்வேத்தியங்களுள் பூரண கொழுக்கட்டையும் ஒன்றாகும். மாவு இறுகாமல், பூ போல, மென்மையான பூரண கொழுக்கட்டையை எப்படி செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
 

Maha Shivratri 2023 Recipes: மென்மையான பூரண கொழுக்கட்டை இப்படி செஞ்சி அசத்துங்க...Representative Image

தேவையான பொருள்கள்

வெல்லம் - அரை கிலோ
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 (துருவியது)
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
 

Maha Shivratri 2023 Recipes: மென்மையான பூரண கொழுக்கட்டை இப்படி செஞ்சி அசத்துங்க...Representative Image

செய்முறை

✤ முதலில் கடாய் ஒன்றை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதனுடன், 1 ஸ்பூன் நெய் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

✤ இந்த தண்ணீரில் அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறலாம். (தண்ணீரில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைப்பதற்குப் பதிலாக, நெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நெய் ஊற்றூம் போது, கொழுக்கட்டைக்கு மாவு பிசைந்தால், கொழுக்கட்டை ஆறினாலும் மாவு மிருதுவாக இருக்கும்)

✤ இவ்வாறு செய்யும் போது தண்ணீரை அதிக நேரம் வற்ற விடாமல், சிறிது தண்ணீர் பதம் இருக்கும் போதே அடுப்பை அணைத்து விட வேண்டும். தண்ணீர் போல இல்லாமல் கெட்டியாக இருப்பதால் மாவு வெந்ததும் இறுகி விடும். பின், இதன் சூடு தணிந்ததும் மீண்டும் கைகளால் பிசைந்து கொள்ளலாம்.

✤ கொழுக்கட்டை தயாரான பிறகு, பூரணம் தயாரிக்கலாம். இதற்கு, தனியாக கடாய் ஒன்றில் வெல்லத்தை உடைத்து அரை கிளாஸ் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடலாம்.

✤ வெல்லம் உறுகிய பிறகு, அதனை வடிகட்டில் மீண்டும் கடாயில் ஊற்றி கிளற வேண்டும். இதில் தேங்காய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

✤ இதில், தண்ணீர் முழுவதுமாக இறுகி பூரண பதம் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.

✤ இவ்வாறு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக எடுத்து, சிறிய வாழை இலை ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் மாவை வடை போல் தட்ட வேண்டும். பின் அதன் நடுவே, ஒரு ஸ்பூன் பூரணம் வைத்து அப்படியே மடித்து விட்டு ஓட்டை இல்லாமல் மூடி விடலாம்.

✤ இதுவே, உருண்டையாக வேண்டுமெனில், உருண்டையை உருட்டில் பின் பூரணம் வைத்து மூடி விடலாம். அவற்றை இட்லி தட்டில் வைத்து மூடி, 15 நிமிடங்கள் அப்படியே வேக வைக்கவும்.

இப்போது சுவையான மற்றும் சூப்பரான பூரண கொழுக்கட்டை மென்மையாக பூ போல் தயாராகி விடும்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்