Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு பானைத் தண்ணீர்..! இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா..? | Pot Water Benefits

Gowthami Subramani Updated:
அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு பானைத் தண்ணீர்..! இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா..? | Pot Water BenefitsRepresentative Image.

அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் தொடங்கும் முன்பாகவே, வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, நண்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை சூரியக் கதிர்களால் வெளியிடப்படும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதில் ஒன்று மண்பானை தண்ணீர். அதனைப் பற்றி இதில் காண்போம்.

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு பானைத் தண்ணீர்..! இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா..? | Pot Water BenefitsRepresentative Image

அதிக தண்ணீர் தேவை

பொதுவாக, வெயிலின் காரணமாக நாக்கு அடிக்கடி வறண்டு போய் காணப்படும். இதனால், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், வெயிலின் காரணமாக பிளாஸ்டிக் வாட்டர்பாட்டில், குடம் உள்ளிட்டவற்றில் இருக்கும் போது அதனுடன் சேர்ந்து, நீரும் சூடாகி விடும். இந்த சூடான நீரைக் குடிக்கும் போது, நமக்கு தாகம் அடங்காமல் இருக்கும். எனவே, தாகம் தணிய குளிர்ந்த நீரைப் பருகலாம்.

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு பானைத் தண்ணீர்..! இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா..? | Pot Water BenefitsRepresentative Image

வெயிலில் ஃபிரிட்ஜ் நீரைக் குடிக்கலாமா.?

தற்போதைய கால கட்டங்களில் குளிர்ந்த நீர் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது குளிர்சாதனப்பெட்டி தான். ஆனால், நாம் வெயிலில் சென்று வந்து உடனே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரைப் பருகும் போது உடல் சூடு அதிகமாவதை உணரலாம். அதே சமயம், இந்த குளிர்ச்சி இருமல், சளி உள்ளிட்டவற்றை வரவைக்கலாம். எனவே, பெரும்பாலும் ஃபிரிட்ஜ் நீரைப் பருகாமல் இருப்பது நல்லது.

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு பானைத் தண்ணீர்..! இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா..? | Pot Water BenefitsRepresentative Image

மண்பானைத் தண்ணீர்

ஃபிரிட்ஜ் நீர் வேண்டாம் என்றால், வேறு எந்த நீர் குளிர்ச்சியாக இருக்கும். நம் முதியோர்களின் நடைமுறையாக விளங்கிய பானைத் தண்ணீர் உடலுக்கு மிக அதிக நன்மைகள் அளிக்கிறது. அதே சமயம், நோய் தடுப்பானாகவும் உதவுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட களிமண் பானை இயற்கையான முறையில் தண்ணீரை சேமிக்கும் சிறந்த வழியாகும். இதிலிருந்து தண்ணீர் குடிப்பதால், நாம் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறலாம்.

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு பானைத் தண்ணீர்..! இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா..? | Pot Water BenefitsRepresentative Image

மண்பானை நீரின் நன்மைகள்

இயற்கையான குளிர்ச்சி

களிமண் பானையில் சேமித்து வைக்கப்படும் நீர் சரியான வெப்பநிலையில் இருக்கும். எனவே, இது குளிர்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், தொண்டை இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

சூரியக் கதிர்களின் பக்கவாதத்தில் இருந்து விடுதலை

பொதுவாக, கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, சூரியக் கதிர்களால் பக்கவாதம் ஏற்படும். மண் பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகும் போது, அதிலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை நம் உடலைக் குளிரூட்டுவதுடன், குளுக்கோஸின் அளவைப் பராமரிக்கிறது. இது சன் ஸ்ட்ரோக் எனப்படும் சூரியக் கதிர்களால் ஏற்படும் பக்கவாதத்தைக் குறைக்கிறது.

நச்சுத்தன்மை இல்லாதது

களிமண் பானையில் உள்ள தண்ணீரில் எந்த வித நச்சு இரசாயனங்களும் இருக்காது. எனவே, இந்த தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரும்.

பருவகால நோய்களை சரிசெய்ய

கோடை வெப்பத்தால், சரும நோய், அம்மை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். மண் பானை நீரில் இருக்கக் கூடிய கனிம சத்துக்கள் இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

மெட்டபாலிசம் அதிகரிப்பு

சாதாரண நீரை விட, களிமண் பானையில் சேமித்து வைக்கும் நீரைக் குடிப்பதன் மூலம், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு சமன் செய்யப்படுகிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்