Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்..! | Purattasi 2023 Special Dishes

Nandhinipriya Ganeshan September 13, 2023 & 15:45 [IST]
புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்..! | Purattasi 2023 Special DishesRepresentative Image.

பொதுவாக, புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே கோவில்களிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதும். அந்த ஒரு மாதம் முழுவதும் கறிகடைகளில் ஈ ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பலர் அசைவம் சாப்பிடாமல் சுத்தமாக இருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். 

நம்மில் பலரும் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்போம். அவர்களுக்காகவே இந்த பதிவு. இதில் கூறப்பட்டுள்ள ரெசிபிஸ் அனைத்தும் அசைவத்தைவிடவும் பலமடங்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. எனவே, புரட்டாசி விரதம் பிடிப்பவர்களும் இந்த உணவுகளை சாப்பிடலாம். வாங்க... ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் சூப்பர் ரெசிப்பீஸ் பற்றி பார்க்கலாம்.

புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்..! | Purattasi 2023 Special DishesRepresentative Image

கல்கண்டு சாதம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பால் - 1 கப்

முந்திரி பருப்பு - 10

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

டைமண்டு கல்கண்டு - 1 கப்

திராட்சை - 10

நெய் - 50 கிராம்

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர், தண்ணீரை வடிகட்டி கொதிக்கும் பாலில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும்.

சாதம் இறுக தொடங்கும்போது கல்கண்டுகளைக் கொட்டி கிளறவும். இப்போது சாதம் இளகி வரும். இந்த சமயத்தில் நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி இரண்டையும் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

மீதமிருக்கும் நெய்யை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். இறுதியாக ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். கொஞ்சம் கல்கண்டுகளை மேலாக தூவி இறக்கினால் கற்கண்டு சாதம் ரெடி. 

புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்..! | Purattasi 2023 Special DishesRepresentative Image

சோளச் சுண்டல்

தேவையான பொருட்கள்:

மிளகு - 1 டீஸ்பூன்

அதிகம் முற்றாத சோளம் - 1

எண்ணெய் - 3 டீஸ்பூன்

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை 

முதலில் சோளத்தை உரித்து முத்துக்களை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயில்லாமல் தேங்காய் துருவலை மட்டும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். 

பின்னர் அதே கடாயில் எண்ணெய்விட்டு வேக வைத்த சோள முத்துக்களை போட்டு வதக்கி, பொடித்த மிளகு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

இப்போது தேங்காய் துருவலை கொட்டி இறக்கினால் சோளச் சுண்டல் தயார். இதில் கொத்தமல்லி இலை மற்றும் மாங்காய் துருவல் தூவினாலும் கூடுதல் சுவை.

புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்..! | Purattasi 2023 Special DishesRepresentative Image

அவல் லட்டு

தேவையான பொருட்கள்:

தேங்காய் - கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது)

கைக்குத்தல் அவல் - 200 கிராம்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

நெய் - 50 கிராம்

பேரீச்சம்பழம் - கைப்பிடி அளவு (கொட்டை நீக்கியது)

வெல்லம் - 100 கிராம்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை 1 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர், அதே பாத்திரத்தில் சிறிது நெய் சேர்த்து சூடானதும் அதில் அவலை கொட்டி நன்றாக வறுக்கவும்.

வறுத்த அவலுடன் ஏலக்காய் பொடி, பேரீச்சம்பழ துண்டுகள், வறுத்த ஏலக்காய், வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

இப்போது, மற்றொரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை போட்டு மிதமான சூட்டில் தேன் பதத்திற்கு காய்ச்சிக்கொள்ளவும்.

இதில் அவல் கலவையை கொட்டி கிளறி, இறக்கி மிதமான சூட்டில் உருண்டைகளாக பிடித்தால் அவல் லட்டு ரெடி. உங்களுக்கு முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும் என்றாலும் உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்