மனித உடலுக்கு தினசரி தேவைப்படம் பொட்டாசியம், கால்சியம், மக்னீஷியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் போன்ற அனைத்து சத்துக்களையும் அதிகளவில் கொண்டிருக்கும் பழம் இந்த செவ்வாழை. வாழைப்பழங்களிலேயே அதிக சத்துள்ளம் என்றால் அது இந்த செவ்வாழைபழம் தான். முன்பெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக நம் கண்ணில்பட்டுக் கொண்டிருந்த இந்த செவ்வாழை, இப்போது எல்லா இடங்களிலும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இந்த பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இப்பதிவில் பார்க்கலாம்.
செவ்வாழையின் நன்மைகள்:
பொதுவாக வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கென்று தனியாக எந்த நேர காலமும் கிடையாது. இருப்பினும் செவ்வாழையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் முழு சத்துக்களையும் பெறலாம். இந்த செவ்வாழையை உணவு சாப்பிட்டவுடன் சாப்பிட்டால் மந்தமாக உணர்வாதோடு இதனுடைய முழு சத்துகளும் நமக்கு கிடைக்காமல் போய்விடும். செவ்வாழை மட்டும் கிடையாது, பொதுவாக அனைத்து பழங்களையுமே உணவு சாப்பிட்ட பின்னர் சாப்பிடக்கூடாது. அப்போ எப்பதான் தாங்க சாப்பிறது கேப்பீங்க.
செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. அப்படி இல்லையென்றால் பகல் 11 மணி அல்லது மாலை 4 மணி போன்ற நேரத்தில் சாப்பிடலாம். இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்கள் வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், உடலை வலுவாக்கவும் உதவுகிறது.
இன்றைய காலத்தில் படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கம்ப்யூட்டரையும் செல்போனையும் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் கண் சம்பந்தமான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றை தடுக்க செவ்வாழை பழத்தை தினமும் காலை ஒன்று, மாலை ஒன்று என சாப்பிட வேண்டும்.
செவ்வாழை பழத்தில் கண் செல்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யும் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, நியூட்டின், ஸியான்தினின் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால், வயது முதிர்ச்சியால் ஏற்படக்கூடிய பல்வேறு கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
முந்தைய நாள் சாப்பிட்ட ஒரு சில உணவுகளால் செரிமானம் தடைபட்ட மறுநாள் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களும் காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட்டால் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான சத்துக்களில் 60% கிடைப்பதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் காணாமல் போய்விடும்.
நீரிழிவு நோயாளிகள்..
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை தொடவே கூடாது என்பார்கள். ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி செவ்வாழை பழத்தை அளவாக எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
உங்க குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமா? நேந்திர பழத்தை இப்படி சாப்பிட குடுங்க...!!
நரம்பு மண்டலம் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையில் ஒரு 6 மணியளவில் ஒரு செவ்வாழைப்பழம் என தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் சரியாகும். அதேபோல், என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்து தினமும் செவ்வாழை பழம் சாப்பிட்டு வாருங்கள். கருமையான தலைமுடி, தெளிவான பார்வை, சுருக்கமில்லாத சருமம் என என்று இளமையாக இருப்பீர்கள். மேலும், இது உடலில் புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…