இந்த வருடம் 74வது குடியரசுதின விழா வருகின்ற ஜனவரி 26அன்று கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தில் பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் அலுவலங்களில் மூவர்ணக் கொடி ஏற்றி உறுதிமொழி எடுப்பார்கள். நாம் நம் வீட்டிலேயே புதிதாக மூவர்ணக் கொடி நிறத்தில் ஒரு இனிப்பான ரெசிபி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.சரிவாங்க அந்த ரெசிபி என்வேன்று பார்க்கலாம்.
அதென்ன மூவர்ண நிறத்தில் ரெசிபி. அது எப்படி தயார் செய்வது? ஆமாங்க. தேசியக் கொடி நிறங்களான ஆரஞ்சு, வெள்ளை, பச்சை என மூவர்ண நிறத்தில் மூவர்ண லஸ்ஸி (Tiranga Lassi), தோக்லா(Tirangi Dhokla) மற்றும் இன்னும் பல்வேறு ரெசிபிகளைத் தயார் செய்யலாம். இந்தப் பதிவில் மூவர்ண லஸ்ஸி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
மூவர்ணக் கொடியில் முதலில் உள்ள நிறம் காவி. இந்த நிறம் வலிமையின் அடையாளமாகவும், வெள்ளை நிறம் உண்மையையும், தூய்மையையும் குறிக்கிறது. பச்சை நிறம் வளத்தைப் பற்றிக் குறிக்கிறது. அனைத்து கருத்தையும் மனத்தில் மறவாமால் வைத்துக் கொண்டு அதனை பின்பற்றி வாழ வேண்டும். அதனைக் குறிக்கும் விதத்தில் தான் நாம் நம் நெஞ்சில் இடது பக்கத்தில் மூவர்ணக் கொடியை அணிந்து கொள்கிறோம். சரிவாங்க இவ்வளவு மகிமை கொண்ட நிறத்தில் நாம் ஒரு ரெசிபி செய்வதைப் பற்றி பார்க்கலாம்.
✤சர்க்கரை - 3 டீஸ்பூன்
✤ஏலக்காய்த் தூள்- 1 டீஸ்பூன்
✤கேசர் சிரப் - 2 டீஸ்பூன்(ஆரஞ்சு கலரில்)
✤தயிர் - 3 கப் (வெள்ளை கலரில்)
✤குஸ் சிரப் (Khus Syrup) - 2 டீஸ்பூன் (பச்சை கலரில்)
✤முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தயிர் சேர்த்து அத்துடன் 1 டீஸ்பூன் ஏலக்காய்த் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் நமக்கு வெள்ளை நிறம் கிடைக்கும்.
✤மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு தயிர் மற்றும் கேசர் சிரப்பை சேர்த்து நன்றாகக் கலந்தால் நமக்குக் காவி நிறம் கிடைக்கும்.
✤அதைப் போன்று மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு தயிர் சேர்த்து அத்துடன் குஸ் சிரப் சேர்த்து நன்றாகக் கலக்கினால் பச்சை நிறம் கிடைக்கும்.
✤ஒரு கண்ணாடி கப்பில் முதலில் பச்சை நிறத்தில் உள்ள கலவை சேர்த்து
✤அதன் பின் அதில் வெள்ளை நிறத்தில் உள்ள கலவை சேர்த்துக் கொண்டு கடைசியாகக் காவி நிற கலவையைச் சேர்த்தால் நம் நினைத்த மூவர்ண நிறம் வந்துவிடும்.
✤பார்ப்பதற்கு நமது மூவர்ணக் கொடி போன்று கிடைக்கும். இந்த லஸ்ஸியை குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண ரெசிபியாக அருந்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…